பக்கம்:மனோன்மணீயம்.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

234 மனோன்மணியம் படுத்துவனவாகும். மேலும், பாரெலாம் பொய்யெனவே" துறந்த பட்டினத்தடிகள், தாயுமான தயாபரர் முதலிய சான்றோர்களின் தொடர்களையும் பொன்னேபோல் போற்றித் தம் நூலிற் பொதித்துள்ளார். சூட்டுடைச் சேவல் சுரைக்கொடி படர்ந்த அவ் வீட்டுச் சியின் மேல் விம்பாய் நடந்து -அங்கம் 2; களம் 2. 11-13 என்ற மனோன்மணியத் தொடர், பஞ்சி முன்றிற் சிற்றில் ஆங்கண் பீரை நாறிய சுரையிவர் மருங்கின் -புறநானூறு : 11 5-9 என்ற புறநானுாற்றுத் தொடரினை நினைவூட்டுவதாகும். அடுத்து, துகிர்க்கா லன்னமும் புகர்க்கால் கொக்கும் செங்கட் போத்துங் கம்புட் கோழியும் கனைகுரல் காரையும் சினமிகு காடையும் பொய்யாப் புள்ளும் உள்ளான் குருகும் -அங்கம் 2: களம் 1. 118-121 என்ற மனோன்மணிய அடிகள், கம்புட் கோழியும் கனைகுரல் நாரையும் செங்கா லன்னமும் பைங்காற் கொக்கும் கானக் கோழியும் ல்ேகிறக் காக்கையும் உள்ளும் ஊரலும் புள்ளும் புதாவும் - -சிலப்பதிகாரம் : நாடுகாண் காதை, 114-117 என்ற சிலப்பதிகார அடிகளை அடியொற்றி அமைந்தன வாகும். செறித்திடுஞ் சிலையினை யுடைத்திடும் புனல்போல் - அங்கம் 3; களம் 1, 26 என்ற உவமை,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/236&oldid=856362" இலிருந்து மீள்விக்கப்பட்டது