பக்கம்:மனோன்மணீயம்.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனோன்மணி நாடக மாண் பு 233 மனோன்மணியின் திடீர்க் காய்ச்சலுக்குரிய உண்மைக் -ார ணத்தை அறிய முடியாமல் அவலமுறுகிறான். அது பொழுது மனோன்மணியின் வேறுபாட்டிற்குரிய காரணம் - மணப் பருவம் வந்துற்றதன் விளைவே என்று கூறுகின்றார் அந்தர முனிவர். குழவிப் பருவம் கழுவுங் காலை களிமிகு கன்னியர் உளமும் வாக்கும் புளியம் பழமுங் தோடும் போலாம். - அங்கம் 1 களம் 4, 167-169 'பெண்கள் குழந்தைப் பருவத்தில் புளியங்காயையும் அதனைப் பற்றியிருக்கும் ஒட்டினையும் போன்று அவர் சொல்லுக்கும் பொருளுக்கும் தொடர்பு இருக்கும்; ஆனால் குழந்தைப் பருவம் கடந்து கன்னிப் பருவத்தை அடைந்த நிலையில், புளியம் பழம் ஒட்டின் உள்ளிருப்பதுபோல் தோன்றினும், உண்மையில் யாதொரு தொடர்பும் இல்லாததுபோல அவர்கள் சொல்லும் சொல்லினுக்குப் பொருள் இருக்காது; அது காதலின் தன்மையாகும்” என்று விளங்கக் கூறுகிறார் சுந்தர முனிவர். இவ்வாறாக, எள்விழற் கிடமிலை" என்று அரச விதியின் ஆள் நெருக்கத்தை நாடகத் தொடக்கத்தில் குறிப்பிடும் சேவகன் முதலாக, தவமுனிவர் சுந்தரர் ஈறாகப் பலரும் தம் பேச்சிடையே பலமொழிகளைக் கையாளு கின்றனர். பன்னூற் புலமை + # = திருக்குறள், பழமொழிகளே யல்லாமலும் பழந்தமிழ் இலக்கியங்களிலும் ஆழ்ந்த பயிற்சியுடையவர் சுந்தரம் பிள்ளையவர்கள் என்பது நூலின் இடையிடையே அவர் கையாண்டிருக்கும் புறநானூறு, சிலப்பதிகாரம், மணி மேகலை, தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, பெரிய புராணம், கம்பராமாயணம், வில்லி பாரதம், நைடதம், நளவெண்பா, திருவிளையாடற் புராணம், நீதிநெறி விளக்கம், ஒழிவிலொடுக்கம் நூல்களின் தொடர்புகள் புலப் ம.-16

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/235&oldid=856360" இலிருந்து மீள்விக்கப்பட்டது