பக்கம்:மனோன்மணீயம்.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

232 மனோன் மரீையம் முகிழ்த்தது என்றும், ஆதலின் மனோன்மணி வரைவிற். காதலிற் கவிழ் வள் என்றும் கூறுகிறாள். உடனே மனோன். மணி தன் மனம் தவத்தை நாடியிருக்குமேயன்றி, அற்ப ஆசைகளில் ஈடுபட்டு அவலம் உறாது என்று குறிப்பிட்டு, கெருப்பையும் கறையான் அரிக்குமோ நேர்ந்தே என்று உள்ள உறுதியோடு மொழிகின்றாள். ஆக, மனோன்மணியும், பழமொழியினைத் தன் பேச். கிடையே பயன்படுத்துவதனைக் காண்கிறோம். அடுத்து, பாண்டிய மன்னன் ஜீவகனிடத்தில் வாணியின் தந்தை சகடர் வந்து தன் மகள்மேல் புகார் கூறுகிறார். தான் அமைச்சன் குடிலன்மகன் பலதேவனுக்கு வாணியை வதுவை செய்ய நிச்சயித்திருக்கையில், நடராசன்மேற் கொண்ட காதலால் தன் சொற்களைச் சிறிதும் செவிமடுக்காமல் வாணி தன் கருத்திற்கு முரணாக நட்ந்து கொள்கிறாள். என்று வருந்திக் கூறிய, அளவில் அங்கிருந்த குடிலன், அவள் விருப்பப்படியே திருமணம் நடைபெறட்டும் என்று கூறவும், உடனே சகடர், “உமது குழந்தையாக இருந்தால் இப்படிச் சொல் வீர்களா? கிளியை வளர்த்துப் பூனை க்குக் கொடுக்கவா? பேயனுக்குக் கொடுக்கவா பெண்னைப் பெற்றோம்” என்று நொந்து சிறிது சீற்றத்துடன் மறுமொழி கூறுகின்றார். சகடர் கூறும், பூவையை வளர்த்துப் பூனைக் கீயவோ என்ற தொடர், * கிளியை வளர்த்துப் பூனைக்குக் கொடுக்கவோ?’ என்ற பழமொழியினை அடியொற்றி: எழுந்ததாகும். வாய்மையும் தூய்மையும் நிறைந்து, தவ உருவாய் விளங். கும் சுந்தர முனிவரும் பழமொழியினைத் தம் பேச்சிடையே. பொதிந்து வைத்துப் பேசுகின்றார். கனவில் காதலனைக் கண்ட மனோன்மணி காதல் நோய் உறுகிறாள். ஜீவகன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/234&oldid=856356" இலிருந்து மீள்விக்கப்பட்டது