பக்கம்:மனோன்மணீயம்.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனோன்மணிய நாடக மாண்பு 231 சொன்னது என்ன என்றும் கேட்கின்றாள். இதனைக் கேட்ட வாணி பதைத்து, ஐயோ கொடுமை! அம்ம அதிசயம் எருதீன் றெனுமுனம் என்னகன் றென்று திரிபவ ரொப்ப நீ செப்பினை ான்று கூறித் தான் தன் காதலனைக் கண்டு நாலைந்து நாட் களாகி விட்டன என்று கூறுகிறாள். மனோன்மணி, ‘காதள வோடிய கண்ணாய்! வாணி! நுமது காதல் கழிந்ததோ, காணாதொருபோ திரேமெனுங் கட்டுரை, வீணானதே" என்று கேட்கின்றாள். அதற்கு வாணி வருந்தி, எதனையும் விளங்கக்கூறும் நிலையில் தான் இல்லை என்றும், யாவும் தன் தலைவிதியே என்றும்,கையற்று வருந்தி மொழிகிறாள். அது பொழுது மனோன்மணி வாணியை நோக்கி எட்பூ ஏசிய நாசியாய்! இயம்புக. மனத்திடை யடக்கலை வழங்குதி வகுத்தே' என்று கூறுகின்றாள். எதனை எவ்வாறு எடுத் துரைப்பது என வாணி கூறித் தலைவிதி தடுக்கற்பற்றோ" என்றும், அத்தலைவிதி முற்றிலும் தன்னை ஆட்டிவைத்த பிறகே தன்னை விட்டு அகலும் என்றும் கூறுகிறாள். வீட்டில் அவளுடைய தந்தையும் தாயும் கொடுமணம் உடையவர் களாக இருப்பதாகவும், அவள் உயிருக்குயிரான காதலர்க்கும் இன்னல் இழைத்ததாகவும் கலங்கி மொழிகின்றாள். அவர் எண்ணிய எண்ணத்தினை முதலையின் பிடிபோல் முடிக்கத் துணிந்தனர் என்றும் குறிப்பிடுகின்றாள். இக் கருத்து "முதலையும் மூர்க்கனும் கொண்டது விடா என்ற பழ மொழியை ஒட்டி யெழுந்ததாகும். இவ்வாறு வாணியின் பேச்சில் பழமொழிகள் பன வந்துள்ளதனைக் காணலாம். மேலும் இவர்கள் உரையாட லில் வாணி காதலின் பெருமை பேச,மனோன்மணி காதனை வெறுத்து மொழிய, பேச்சு சுவைப்படத் தொடர்ந்து சென் கின்றது.இறுதியில் செவிலித்தாய் இவர்கள் பேச்சின் இடை யில் வந்து,மனோன்மணி வளர்த்த முல்லைக்கொடி நறுமுகை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/233&oldid=856354" இலிருந்து மீள்விக்கப்பட்டது