பக்கம்:மனோன்மணீயம்.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

230 மனோன்மணியம் மருந்தோமற் றுானோம்பும் வாழ்க்கை பெருங்தகை பீடழிய வந்த இடத்து -திருக்குறள் 898 என்னும் இரு குறட்பாக்களைப் பின்பற்றி எழுந்தவை யாகும். இவ்வாறாக மாண்பு நிறைந்த மனோன்மணிய நாடகத்தில் குறட் கருத்துக்கள் ஆங்காங்கே விரவி வந்தி ருக்கக் காணலாம். பழமொழிகளைக் கையாளும் பான்மை பேராசிரியர் சுந்தரம் பிள்ளை அவர்கள் நாட்டு மக்க ளிடையே தொன்று தொட்டு வழங்கிவரும் பழமொழிகளை நன்கு உணர்ந்தவராகத் தெரிகின்றார். ஏனெனில் மனோன் மணிய நாடகத்தில் அறுபதுக்கும் மேற்பட்ட பழமொழிகன் வந்திருக்கக் காணலாம். இப்பழமொழிகள்,கூறவந்த கருத்து களுக்கு அரண்செய்வதோடு, நாடகச்சுவை சிறக்கவும்துணை புரிகின்றன. பல்வேறு பாத்திரங்கள் பல்வேறு பழ மொழி களைக் கையாளுகின்றன. ஒவ்வொருவர் கையாளும் பழ மொழிகளும், அவ்வப் பாத்திரங்களின் பண்பினைப் பகர் வதாகவும் உள்ளன. பண்பாட்டின் பிறப்பிடமான பழ மொழிகள் இடம் நோக்கி இனிமையுறக் கையாளப் பெற் றிருப்பதனைப் பின்வரும் சான்றுகளால் தெள்ளிதின் அறியலாம்: முதல் அங்கத்தின் இரண்டாம் களத்தில் கன்னி மாடத் தில் ஏற்பாடு நேரத்தில் மனோன்மணியும் வாணியும் கழல் விளைாடுகின்றனர்; பாடிக்கொண்டே அவர்கள் கழல் விளை யாடுகின்றனர். வாணி பாடிய பாட்டில் நடராசன் என்ற பெயர் வந்தது. மனோன்மணி வாணி பின் காதலைப்பற்றி வினவுகின்றாள்; அவள் கன்னம் களவை வெளிப்படுத்தி விட்டது என்றும், எனவே காதலன் அவளுக்கு நேற்றுச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/232&oldid=856352" இலிருந்து மீள்விக்கப்பட்டது