பக்கம்:மனோன்மணீயம்.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனோன்மணிய நாடக மாண் பு 241: என்றும் மனோன்மணியிடம் பேசும் ஜீவகன் கூற்றால், _அவன் அவள்பால் கொண்ட கரையிலாத அன்பு புலனாதல் காணலாம். மாறாகக் கு டி ல ன் பல தேவனையே இறுதியில் வெறுத்துப் பேககிறான். பிரியமும் நீயும், பேய்ப்பயல்! பேய்ப்பயல்! எரிவதென் உளமுனை எண்ணுங் தோறும் அரியவென் பணமெலாம் அழிந்து மற்றின்று விதியிது இவனுடன் விளம்பி யென்பயன்? என்று பலதேவனை வெறுத்து மொழிவதோடு, வதுவை போயின் என்? ஆயின் என்?" என்று தன் மகன் வாழ்வின் நலம் கருதாமல் தன்னலமே கருதுகின்றான். இவ்விருவர் உள்ளத்திற்குத் தகவே மக்களும் வாய்த் தனர். தன் தந்தைமேல் கொண்ட அளவிடற்கரிய அன்பால் தன் காதலையே தியாகம் செய்ய ஒப்புக் கொள்கிறான் மனோன்மணி. தன் கனவில் வந்து கருத்தில் நிறைந்த புருடோத்தமனைக் கூட எண்ணாமல், தான் வெறுக்கும் பல்தேவனை மணம் செய்து கொள்ள ஒப்புக் கொள்கிறாள். மேலும், அன்னையும் கின்னை அன்றிவே றறியேன். உன்னதே இவ்வுடல் உன்திரு உள்ளம் உன்னிய படியெலாம் உவப்பச் செய்குவன் என்று மன்னன் மனப்படியே நடக்க மகள் துணிகிறாள். இங்கே, பலதேவ ன் வேலால் நெஞ்சிற் குத்தப்பட்ட நிலையில் மனம் குமுறித் தன் தந்தையைத் தகாத முறை யில் இழிவு படப் பேசுகிறான்: மன்னனைக் குத்திட உன்னினை; ஊழ்வினை என்னையே குத்திட இசைந்தது, யார்பிழை? பணம்பண மென்று பதைக்கின்றாய் பினமே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/243&oldid=856378" இலிருந்து மீள்விக்கப்பட்டது