பக்கம்:மனோன்மணீயம்.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

242 மனோன்மணியம் என்று குடிலனைப் பழித்துப் பேசும் பலதேவன் மனோன் மணியின் அன்பிற்கு முரண்பட்ட பாத்திரமே யன்றோ?

  • அறிவிலாத் தங்தையர் தம்வினை மக்களைச் சேரும்" என்றபடி கொடுமனக் குடிலன் மனத்தில் ஊன்றப்பட்ட விஷவித்திலிருந்து தழைத்த மரமே பலதேவன் எனலாம்.

ஜீவகன் வீரமும் மானமும் நிறைந்தவன். போர் குறிக் காயமே புகழின் காயம் என்பது அவன் கருத்து. அவன் படைஞர்க்கு ஆற்றும் வீரவுரை அவனுடைய வீரத்தினை விளங்க உரைக்கும். முதல் நாட் போரில் தோல்வி கண்ட திலையில் தன் உயிரைத் தானே வாளால் மாய்த்துக்கொள்ளத் துணிகிறான். செருமுகத்து இரிக்தென் மானம் செகுத்தும் உயிரினை ஒம்பவோ உற்றது? ஒர்சிறு மயிரினை இழக்கினும் மாயுமே கவரிமா என்று மானம் இழந்த பின் வாழாமை முன் னினிதே' என்று. ஜீவகன் நாராயணனிடம் குறிப்பிடுகின்றான். குடிலனோ, வீரர்கள் துரத்தத் தன் மகனோடு வீதியில் நெடுக ஒடி அஞ்சி ஒளிகிறான். தீது கன்றென ஓதுவ வெல்லாம் * அறியார் கரையும் வெறுமொழி யலவோ? பாச்சி பாச்சி என்றழும் பாலர்க்குப் பூச்சி பூச்சி என்பது போலாம் என்ற குடிலன் கூற்றால், அவன் பழியஞ்சாப் பாழுள்ளம் புலனாதல் காணலாம். -- மக்கள் நலமே தன் நலம் என மதிப்பவன் மன்னன் ஜீவகன். தன் நலமே மக்கள் நலம் என மறித்து நினைப் பவன் மதியமைச்சன் குடிலன். சுருங்கக் கூறின் ஜீவகன் வெளுத்ததெல்லாம் பாலெனும் மெய்ம்மை உளத்தவன் : களங்கம் ஒராதவன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/244&oldid=856380" இலிருந்து மீள்விக்கப்பட்டது