பக்கம்:மனோன்மணீயம்.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனோன்மணியம் 243 குடிலன் சூதே உருவாய்த் தோன்றின வன்; தன்னலத்தில் தாய்ந்த உள்ளத்தினன்; நல்லவன் போலவே நடிப்பவன்? பொல்லா வஞ்சகன். இவ்வாறு இருவகை முரண்பட்ட பாத்திரப் படைப்புகள் பேராசிரியர் சுந்தரம் பிள்ளை அவர்கள், சுவையாக நாடகத் _னை நடத்திச் செல்லத் துணை புரிகின்றன. இது போன்றே காதலே வாழ்வு எனக்கொண்ட வாணி ஒருபுறமும், தியாகமே வாழ்வு எனக்கொண்ட மனோன்மணி பிறிதொரு புறமும் இந்நாடகத்தில் இடம் பெறுகின்றனர். தந்தை சகடர் பேச்சை மீறுகிறாள் வாணி. சகடரி, ..........--............தாதையர் மாற்றங் கேளா மக்கள் கூற்றுவர் எனுமொழி யெனக்கே யனுபவம் என்று கூறுமளவிற்கு அவள் காதல் உறுதிப் பாடுடையது. மன்னன் அச்சுறுத்தியும் மாறாது காதலில் மன்னும் உள்ளம் அவன் உள்ளம். மனோன்மணியோ தந்தை உருவாக்கும் வண்ணம் தன் வாழ்வு அமைவதாக என அமைதியாகத் தன் -ாதலுக்கு விடை கூறி நிற்கிறாள். வாணிக்குக் காதலே பெரிது: மனோன்மணிக்குத் தன் தந்தையே பெரியன். முதலில் காதலை வெறுக்கும் மனோன்மணி காதலில் அவிழ்கின்றாள். ஆனால் நாடகத் தொடக்கத்திலிருந்து இறுதிவரை காதலில் ஒரே நிலையுடன் உலவி வருகிறாள் வாணி. இறுதியில் யாவும் இனிதே முடியக் காண்கிறோம். காப்பிய இலக்கணம் கிரம்பிய நூல் வாழ்த்து வணக்கம் என்னும் இரண்டு பொருள்களில் இன்று முதலாவதாக அமைந்து, அறம், பொருள், இன்பம், விடு என்னும் நாற்பொருளினையும் உள்ளடக்கி, தன்னிக ரில்லாத தலைவனை உடைத்தாய், மலை, கடல், நாடு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/245&oldid=856382" இலிருந்து மீள்விக்கப்பட்டது