பக்கம்:மனோன்மணீயம்.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

244 மனோன்மணியம் வளநகர், பருவம், இரு சுடர்த் தோற்றம் முதலிய வருணனைகள், அமைந்து, நன்மணம் புணர்தல், பொன்முடி கவிழ்தல், பூம்பொழில் நுகர்தல், புனல் விளையாடல், சிறு வரைப் பெறுதல், புலவியில் புலத்தல், கலவியிற் களித்தல் முதலியன புனையப் பெற்று, மந்திரம், துாது, செலவு, இகல், வெற்றி முதலிய சந்தியிற் றொடர்ந்து, சருக்கம், இம்ைபகம், பரிச்சேதம் என்னும் உறுப்புகள் கொண்டு, நல்ல சுவையும், பாவமும் நிறைந்து, கற்றோர் புனைவது பெருங்காப்பியம் என்பர். அவற்றில் சில உறுப்புக்கள் குறைந்து வருவது காப்பியமெனப்படும். * நாடகத் தொடக்கத்திலே அமையும் தமிழ்த் தெய்வ வணக்கத்தினை வாழ்த்து வணக்கமாகக் கொள்ளலாம். அற வாழ்வின் விளக்கங்களை யெல்லாம் கருணாகரர் பேச்சுக் கொண்டு தெளியலாம். பொருளின் பல்வேறு வகைப்பட்ட நடையமைதிகளை நாராயணன் பேச்சால் நலமுற விளங்கிக் கொள்ளலாம். இரட்டுற மொழிதலில் இவன் வல்லவனாக விளங்குவதனை நூல் முழுதும் காணலாம். இயற்கையில் ஈடு பாடு கொண்ட நடராசன் இல்லறத்தின் இயல்பினையும், பெண் இன்பத்தின் இனிமையினையும் பாங்குறக் கிளத்து கின்றான். இல்லறத்தின் இறுதியாய் விளங்கும் பேரின்ப நெறியே அந்தமில் இன்பத்து விட்டுப் பேற்றினைத் தருவ தாகும் என்ற உண்மையை, அநுபூதியின் மேன்மை குறித்து அறைந்து பேசும் நிஷ்டாபரர் வாக்குக் கொண்டு தெளியலாம். நூலின் தொடக்கத்தில் சுந்தர முனிவரிடம் குடிலன் தான் அரும்பாடுபட்டு அமைத்த திருநெல்வேலிக் கோட்டை யின் சிறப்பினையும்,பாண்டிய நாட்டின் மேன்மையினையும், பொதிய மலையின் பெருமையினையும், தாமிரபரணி யாற்றின் உயர்வினையும் விளங்க எடுத்து மொழிகின்றான். தென்பாண்டிநாடு சிவலோகமாக விளங்குகின்றது. பொதிய மலையில் அகத்தியர் வாழ்கிறார். பொதியத்தில் பிறந்து, விலையுயர்ந்த முத்தையும் வேழ மருப்பையும் அடித்துக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/246&oldid=856384" இலிருந்து மீள்விக்கப்பட்டது