பக்கம்:மனோன்மணீயம்.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனோன்மணிய நாடக மாண்பு 245 - கொண்டு, சந்தனக் காடுகளை அழித்து, சங்கம் நிறைந்த விளைநிலங்களில் படிந்து, பொழில் பல கடந்து, குளம் பல நிரப்பி வளம் கொழித்து வருகிறது தாமிரபரணியாறு. பாண்டியர் தலைநகராம் திருநெல்வேலி அமரர் பொன் -ராம் அமராவதியினும் பொலிவுற்று விளங்குகின்றது. கோட்டையைச் சுற்றி அமைந்துள்ள அகழி கடல் ஆழமாக _ள்ளது. இவ்வாறு ஆசிரியர் மலை, கடல், நாடு, வளங்கர் முதலியனவற்றை அழகுறப் புனைந்துள்ளார். நடராசன் தனிமொழியில் வைகறையில் கீழ்வானத்தில் பாலம் புதுக்கியெழும் கதிரவனின் தோற்றமும், மாலை யிலேயே மேற்றிசையில் மாணிக்கச் சுடராய் மறையும் கதிரவனின் மறைவும் இடம் பெற்றுள்ளன. நீவியக் கிழியில் டிவியத் தொழில்வல்லோன் தீட்டிய சித்திரம் போல’ என்று ாழு ஞாயிற்றின் எழிலும், பொன்வினைக் கம்மியன் உருக்கி விடுதற்குயர்த்திய ஆடகப்பெருக்கென விளங்கும்" என்று அத்தமன சூரியனின் அழகும் கவினுற இந்நூலில் கிளத்தப் பட்டுள்ளன. * குடிலனின் சூழ்ச்சிகள் அனைத்தும் மந்திரம்-ஆலோசனை பின் விளைவுகள்; புத்தியே சகல சக்தியும்" என்று அவன் கருதும் அறிவாற்றலின் விளைவுகள். பலதேவன் புருடோத்தமனிடத்தில் துனது செல்கிறான்: இரு நாட்டிற் கம் இடையிலான இகல் நன்செய் நாடு குறித்தது என மொழிகிறான். புருடோத்தமனிடத்திலிருந்து ஜீவகன் அவைக்கு வரும் துாதன் உழிஞை சூட உளம் பற்றி நிற்கிற தன் மன்னன் உள்ளத்தினைக் கூற, ஜீவகன் கொச்சி குடுவேன் என அவனிடம் ஆர்.பரித்து எதிர் மொழி தருகின்றான். வீரம், செலவு. வென்றி, சந்தி முதலியன போர் காரணமாக எழுகின்றன. நாடக. இறுதியில் குடிலன் சூழ்ச்சிகள் எல்லாம் அழிந்து இறையருளால் மனோன்மணி புருடோத்தமனுக்கு மாலை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/247&oldid=856386" இலிருந்து மீள்விக்கப்பட்டது