பக்கம்:மனோன்மணீயம்.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

246 மனோன் மணியம் குட்டுகிறாள். கன்மணம் சுந்தார் மூதலாய நல்லோரி வாழ்த்துடன் நன் சிறப்புடன் நடைபெறுகின்றது. மேலும் சருக்கம், இலம்பகம் என்ற பழைய பாகுபாடு இன்றி அங்கம், களம் என்ற புதிய பாகுபாட்டுடன் இந்நூல் இலங்குகின்றது. _ உயரிய கருத்துக்களை உள்ளடக்கி உயர்ந்த நெஞ்சத்தி விருத்து முகிழ்த்த நூல் மனோன்மணியமாகும். இந்நூல் நாடக தமிழ்த்துறைக்கு இடைக் காலத்தே ஏற்பட்ட நலிவினை மெ.வி வித்து நன்னலம் சேர்ப்பதாகும். இவ்வா றாக பேராசிரியர் சுந்தரம்பிள்ளை அவர்களின், மனோன் மணியம் நாடக நல்லியல் புகள் அனைத்தும் அமைந்து காப்பிய அமைதி கவினுறத் துலங்கி, கருத்து மேம்பாடுகள் வண்ண முறப் பொலிந்து, மாண்புடன் தமிழ் இலக்கிய வானில் வண்ணமுறத் தனி ஒளி வீசித் திகழ்கின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/248&oldid=856387" இலிருந்து மீள்விக்கப்பட்டது