பக்கம்:மனோன்மணீயம்.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. நன்செய் காட்டின் வளம் மனோன்மணிக்கு ஏற்ற கணவன் சேரநாட்டு மன்னன் புருடோத்தமனே என்று சுந்தர முனிவர் ஜீவகனிடம் கூறு கின்றார்; நடராசனைத் துரது அனுப்பி மன்றல்வினை பேசி வரச் சொல்கிறார். முனிவர் போன பின், ஜீவகன் தன் மந்திரி குடிலனோடு இது குறித்துப் பேசுகிறான். குடிலன் . பெண் வீட்டார் முதலில் மணம் பேசிச் செல்லுதல் மரபும் வழக்காறும் அன்றென்றும், அதற்குபாயமாகத் தங்கள் ஆட்சிக் கீழ் முன்னர் இருந்த நன்செய் நாட்டின் மீது உரிமை கோகித் துரது அனுப்புவோம் என்றும் கூறி, நாஞ்சில் நாட்டு.நன்செய் நாட்டு வளத்தினைச் சிறக்க வருணித்துப் பேசுகின்றான். இவ்வாறு குடிலன் கூறும் நன்செய் நாட்டு வருணனை திணை மயக்கத்தினைத் திறம்படக் கூறுகின்றது. இன் _ருணனையில் மருதவளமும் நெய்தல் வளமும் மயங்கு கின்றன. செல்வம் சேர்ந்த அந்நாட்டினை வருணனிக்கும் பொழுது, ஆசிரியர் சுந்தரம்பிள்ளை அவர்கள் சொல்லழ கும் பொருளழகும் பொருந்தி வரும் வண்ணம் நன்செய் நாட்டினை நம் கண்முன் தோன்றுமாறு வருணிக்கின்றார். இனி நன்செய் நாட்டின் வளத்தினைக் காண்போம்: 1. நெய்தல் நிலத்து வெண்மணலில் அங்கு வாழும் பரதவப் பெண்கள் (துளைச்சியர்கள்) உப்பிட்ட மீனை உலர்த்துகின்றனர். அம் மீன்களை மருத நிலத்து வண்டானங் குருகு வர வர, அதனை ஒட்ட அந்த துளைச்சியர் காதில் அணிந்துள்ள பொற் குழையை எடுத்து வீசுகிறார்கள். அப்பொற் குழை தவறிப்போய், கடற்கரையி அள்ள புன்னை மரத்தடியின் நிழலில் உறங்கி, அம்மலர்த்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/249&oldid=856389" இலிருந்து மீள்விக்கப்பட்டது