பக்கம்:மனோன்மணீயம்.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

克●8 மனோன்மணியம் தாதுக்களால் பொன்னிறம் பெற்றுப் பொலிந்து திரும்பி மருதநிலத்துக்குச் சென்ற எருமையின் மேல் அமர்ந்து, சிறகுலர்த்தும் காக்கையின்மீது பட்டு அதற்கு உறுகண் விளைவிக்கும். (இங்கு நெய்தல் நிலமும் மருதநிலமும் ஒன்றிற்கொன்று அணித்தே இருந்து திணை மயக்கம் ஏற்படு கின்ற அழகு காண்க.) 2. நெய்தல் நிலத்து ஒடும் நீரோடையின் கரையில் மலர்ந்து மணம் பரப்பும் தாழம்பூவின் நிழலைத் தனது பெடை என எண்ணி மயங்கிய தாராக் கோழி (வாத்து) அதனை ஒடித் தழுவிற்று; இச்செயலைக் கண்ட ஆம்பல் மலர் ஏளனம் செய்து சிரிக்கவும், சிரித்த அதன் வாயில் தன் மகரந்தத் தாதுக்களைக் கொட்டிக் கோங்குமரம் விலக்கும். 3. சங்கினம் ஈன்ற வெண் ணிற முத்துக்களை அன்னப் Eறவையின் முட்டைகள் என்று மயங்கிய பருந்துக் கூட்டம், அவற்றைத் தம் கால்களால் கவர்ந்து சென்று அடப்பங். கொடியிலே மறைத்து வைக்கும். 4. கருப்பஞ் சாற்றினைப் பக்குவமாகக் காய்ச்சும் மருத நிலச்சாலையில் எழுகின்ற புகை மண்டுதலால், நெய்தல் நிலத்தில் வாடி வதங்கிய கொடிகள் தளிர்க்கும்படி, புல்மேய்ந்து திரும்பும் எருமை, அப்புகையினைத் தன் கன்றெனக் கருதி மயங்கித் தன் தீம்பாலைச் சொரியும். 5. நிலத்தில் உழவர்கள் தங்கள் கலப்பையால் ஆழ உழுதலின் விளைவாக அக்கலப்பையின் நுனி பூமியைத் தோண்டிக் கொண்டு போகும்பொழுது, அதனால் துன்பம் அடைந்த ஆமை, பரதவப் பெண்கள் தங்கள் கணவரோடு கொண்ட ஊடலில் விளைந்த சினத்தால் கோபத்தோடு தங்கள் மார்பில் மணக்கப் பூசியிருந்து வழித்தெறிந்த குங்குமச் சேற்றில் மறைந்து கொள்ளும். i. 6. மருதமரத்தின் அழகிய கிளைகளில் வாழும் அன்றில் பறவைகள், மிகுந்த மீன்களைப் பிடிப்பதற்காக, நெய்தல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/250&oldid=856393" இலிருந்து மீள்விக்கப்பட்டது