பக்கம்:மனோன்மணீயம்.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நன்செய் நாட்டின் வளம் 249 நிலத்துப் பரதவர்கள் அமைதியான இரவில் கொட்டும் பறையொலியைக் கேட்டுக் கண் உறங்க மாட்டாதன வாய்த் அலங்கும். 7. மூங்கில்போல் செழித்து வளர்ந்துள்ள மருத நிலத்து வயல்களின் நெற்பயிரின் அடித்தாள்களிடத்தே, உப்புப் பொதி ஏற்றிய ஒடங்களைப் பரதவர் கயிறுகொண்டு கட்டி வரிசையாக நிறுத்துவர். 8. நாட்டில் நாடெங்கும் இரவு பகல் என்று பாராது மேகம் என்னும் கொள்கலம், தான் கடலில் முகந்த நீரினைக் _வித்துக் கொட்டிய பிறகு செல்லும் வழியில் சிந்திய சிறு நிரே பாண்டிய நாட்டு வறுமையைப் போக்கும் சாரலாகும். 9. நன்செய் நாட்டில் நிறைந்து பெருகியோடும் ஆற்று வெள்ளமும், கடல் வெள்ளமும் ஒன்று கலந்து ஒன்றிற் கொன்று விட்டுக்கொடுக்காமல் இளைக்காது எப்பொழுதும் எதிர்த்து நிற்கும் பிணக்கினால், நடுக்கடல் நீரும் உவப்பின் |றித் நன்னிராய் இருக்கும். அக் கடலின் ஒரமாக இருக்கும் வயற் கரையில் மரக்கலங்கள் வந்து தங்கும். -- 10. கால்வாய்களில் ஒடி மதகுப் பலகையைக் கடந்து பாய்ந்து விழும்போது எழும் ஓம்’ என்ற நீரின் ஒசை விடாது ஒலித்ததினால், அவ் ஒசை பிரணவ ஒலியேபோல் அந்நன் செய் நாட்டின் இருபுறமும் எஞ்ஞான்றும் ஒலித்துக் கொண்டே இருக்கும். 11. நறுமணங் கொண்ட மலர்களையுடைய குவளைக் கொடியும், பன்னிறப் புற்களும் படர்ந்துள்ள நிலத்தைக் கம்பளமாக விரித்துக் கொண்டும், தாமரையின் துரய்மை TLITTG,7 மொட்டுக்களைப் புகையில்லாத விளக்காகக் கொண்டும், நிலவொளி வீசும் முத்துக்களையும் சோளிகளை யும் பணமாகப் பரப்பியும், நண்டுகள் வணிகர்களைப் போல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/251&oldid=856395" இலிருந்து மீள்விக்கப்பட்டது