பக்கம்:மனோன்மணீயம்.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

250 மனோன்மணியம் அமர்ந்து தம் விரல்களால் அப்பணத்தினைக் கணக் கெண்ணிப் பார்க்கின்றன. அது பொழுது செந்நிறக் கால் களையுடைய வெண்ணிற அன்னமும், புகர்க்காலினை யுடைய கொக்கும். சிவந்த கண்களையுடைய செம்போத்துப் பறவையும், கமபங்கோழியும் உரத்த குரலையுடைய நாரை யும், கடுஞ்சினங்கொண்ட காடையும், பொய்யாப் புள்ளும், உள்ளான் குருவியும் என்றிவை பலவும் சேர்ந்து குழுமித் தங்கள் சிரம் சிறிதசைத்தும் இறகை அடித்தும், மாலைக் கடையாம் அங்காடியின் அழகை விளக்கி, வணிகர் பேசும் குழுக்குறிபோல் தத்தம் கூட்டத்தினரை விளித்து அழைக்கும் பேரொலியே அந்நாட்டின் ஒரு பக்கம் கேட்கும். 12. வலிமை சான்ற எருதுகளை வரிசை வரிசையாக நிறுத்திப் பொன்னேர் பூட்டி நின்ற சகர குமரர்களுக்கு ஒப்பான சலியாத உழைப்புடைய உழவர்கள் வாழ்த்திப் பாடும் குரவைப் பாட்டு ஒரு பக்கம் மங்கலமாய் முழங்கும். 13. வயலில் சேற்றிடை நெருங்கி வளர்ந்துள்ள நாற் றினை எடுப்பவர்களும், அவற்றைக் கூறுபடுத்திக் கட்டாகக் கட்டுவோரும், பின் அந்நாற்றினை நடுகை வயலுக்கு நடவுக் குக் கொண்டுசெல்வோரும் நடுவோரும் களை களைவோரும் ஆகிய கள்ளுண்டு களிக்கும் பள்ளியர், பள்ளுப் பாட்டும் இசைப் பாட்டும் பாடும் ஒலம், ஒரு பக்கம் எங்கும் பரவி விளங்கும். 14. குன்றென அரிந்து குவிக்கப்பட்டிருக்கும் செந்நெற் போரின் மீது பிணை விடப்பட்டுச் சுற்றி வரும் எருமைகள் மேகம்போல் விளங்க, அதுபோது எழும் மருதநிலப்பறையின் மங்கலவொலி எங்கும் நிறைந்திலங்கும். 15. இறகால் தம்முடல் தடவிடின் கூச்சத்தால் சிரிக்கும் சிறு பெண்களைப் போன்று, நாஞ்சில் நாடாம் நிலமகள் வயலுழவர்களின் கலப்பையின் கொழுமுனை தன்மேல் படு வதற்கு முன் கூச்சம் அடைந்து, தன் உடல் குழைந்து இளக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/252&oldid=856397" இலிருந்து மீள்விக்கப்பட்டது