பக்கம்:மனோன்மணீயம்.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

254 மனோன்மணியம் நீர்மையும் அவ்வாறு ஒருவரை யொருவர் உன்மையாய் நேசிக்கும் காலத்து, இடையூறு அவர்களைப் பிரிக்க, அப்பிரி வினால் அவர்கள் துயருறுவதும் இடையில் பலதிறப்பட்ட இன்னலுற்றுப்பின் திருவருள கூட்ட அணைந்து இன்புறு வதும் ஆகிய இந் நிகழ்ச்சிகளை யன்றோ கேட்கவோ சொல்லவோ விழையும்! அவ்விதம் சொல்லவோ சொல் வதைக் கேட்கவோ விழைய அதற்கேற்ற தகுதி இருவரிடத் லும் இருத்தல் வேண்டும். கேட்பவரைக் காட்டிலும் சொல் பவருக்கு மனத்திட்பமும், முதிர்ந்த அனுபவமும் இருத்தல் வேண்டும். கேட்பவர் அநேகமாக ஐய உளமுடையவரா யிருப்பர். இப் பெற்றி தெரிந்து ஆசிரியர் சுந்தரம்பிள்ளை யவர்கள், மனத்திட்பமும், முதிர்ந்த அறிவும், காதலில் பழகிய உளமும், உலக அனுபவமும்,தான் சொல்லும் நிகழ்ச் சிகளில் அநேகமாக அனுபவித்தறிந்தவளுமான வாணியின் வாயிலாக இச் சிவகாமியின் சரிதத்தைச் சொல்லவைக் கிறார். கல்விகேள்விகளால் முதிர்ந்த அறிவு நிரம்பப் பெற்ற வளே யாயினும் உலகம் இன்னதென அறியாதவளாதலாலும் காதல் என்பது என்? பூதமோ பேயோ?" என்று கூறி நகை பாடிக் கனாத்திறத்தினால் இஞ்ஞான்றே காதலின் தகுதியைச் சிறிது உணரப் பெற்றவளாதலாலு ம் மனோன்மணியைக் கேட்கவைத்தார். இவ்வித நுட்பம் தெரிந்து இச் சிவகாமி சரிதத்தை அமைத்த ஆசிரியரது பேரறிவு போற்றத்தக்கது” என்று கலாநிலையம் என்ற பழைய திங்கள் இலக்கிய ஏடு சிவகாமி சரிதம் அமைந்துள்ள சிறப்பினைப் பாராட்டி உரைக்கின்றது. இனிக் கதையினைக் காண்போம். கட்டழகு நிறைந்த காளை ஒருவன் துறவு வேடம் புனைந்து தொல்லை மிகப்பட்டுப் பாழடவியில் பாதைவிட்டு அலைந்து கொண்டிருக்கும் நிலையில் ஒரு மெளன தவமுனரி வனைக் கண்ணுறுகின்றாள்; தனக்கு மனமிரங்கி அருள் புரிந்து பாவியொருவனையளித்த பலனைப் பெறவேண்டு மென்கிறான். "நடக்க நடக்கப் பின் தொடரும் நிழலைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/256&oldid=856405" இலிருந்து மீள்விக்கப்பட்டது