பக்கம்:மனோன்மணீயம்.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவகாமி சரிதம் 255 போன்று எல்லையற்றுப் பரந்து சொற்களையும் தொடரும் அாடு முழுவதும் அலைந்து திரிந்தேன். அடவியின் ஆரிருளில் இனி நடக்க ஆவதில்லை; எனவே அருள் கூர்ந்து உடலம் அறும் வகை உளதாகிய வீட்டுப்பேற்றினையும் அதனை அடையும் நெறியினையும் பாங்காக எனக்கு உணர்த்த வேண்டும்' என்று கேட்டுக் கொண்டான். மெளன தவ முனிவனின் காதில் இந்த வேண்டுகோள் வீழ்ந்தவுடனே "தனிப்பெருங் காடு இது; இதுவே என் வீடு: இங்கு உலகோர் அணையார்; வேறொன்றும் மடமில்லை: அவாவினை யடக்கிய அறந்தரு நெஞ்சினரே என் வீட்டினை படைதல் ஒல்லும் அவ்வாறு இங்கு வருபவர் பணிப்பாயி னையும் பூவணையினை யும் எண்ணிப் பார்க்க மாட்டார்கள். பருகுவதற்குப் பாலமிழ்து ம் கிடைக்காது. ஆயினும் நீ என்னுடன் வருவதால் உன் வேதனையும் மெய்ச்சலிப்பும் உன்னை விட்டகலும்! நீ விரும் பின் என்னைப் பின் தொடர்ந்து வருக; இன்றேல் வேறு இடம் காண்க: என்று மொழிந்தார். இவ்வாறு முனிவர்கூறிய இனிய மொழிகேடடு இருசெவியும் குளிர்ந்தான். பழைய நினைவு வந்து அவன் கண்கள் நீரைப் பணித்தன. நன்று' என்று கூறி நற்றவ முனிவன் நடந்து சென்ற வழியினைப் பின்பற்றித் தொடர்ந்து நடந்து சென்றான். இந்திரசால வித்தை புரிவோன் இட்ட கருந் திரை போன்று எட்டுத்திசைகளிலும் இருள் பரந்து விரிந்தது. அந்தரத்தில் சுந்தரத் தாரைகள் கண் சிமிட்டித் தங்களுக்குள் ஏதோ அரிய ரகசியங்கள் பேசி புன்னகைபுரிந்துகொண்டன. ான புருகப் பிணைந்த இணை அன்றிற் பறவைகள் சிறிது விலகின : அச்சிறு பொழுது பிரி வினையும் பொறுக்கமாட் -ாது ஏங்கி, உயிர் விடுப்பன போல இடையிடையே கூ வின. அவற்றின் அன்பு நிலையை அறிந்தன போலவும், அவற்றின் துயரத்தினைத் தெரிந்தன போலவும் மரங்கள் அகமுடைந்து தம் அலர்ந்த மலர் துரவிக் கண்ணிர்க் காணிக்கை செலுத் தின. வெளவாற் பறவை இருட்டில் இங்கும் விந்தை நடப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/257&oldid=856407" இலிருந்து மீள்விக்கப்பட்டது