பக்கம்:மனோன்மணீயம்.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

256 மனோன்மணியம் பதைத் தெரிவிக்க விளிப்பவர்போல் அலைந்தன; மின்மினிப் பூச்சிகள் விளக்கெடுப்பன போல் வெளிச்சம் தந்தன. இவ் வாறு காதலில் கட்டுண்ட இளைஞர் உயிர் வாட, அந்தி என்னும் பசலை மெய்யாட்டியை முன் ஏவி, இரவென்னும் இறைவி வந்திருந்தனள். பொறியரவின் தலையிலுள்ள மாணிக்கக் கற்களும், யானைத் தந்தங்களும். புலியின் அனல் விழிகளும் வெளிச்சத்தை உமிழ்ந்தன. பிரிவரிய ஊசி வழி பின் தொடரும் நூலைப்போல் பேரயர்வோடு மன மிறந்து முனிவரைப் பின்தொடர்ந்தான் மைந்தன். முனிவரோ அரிய புதரை அகற்றி, அன்போடு இளைஞனை அழைத்துச் சென்றார். முட்களை ஒதுக்கி நுழைந்தும், குகைகளை குறித்துக் கடந்தும், ஒங்கார ஒலி எழுப்பும் காட் டாற்றினைத் தாண்டியும், தவமுனிவனின் இடம் வந்து சேர்ந்தார்கள் இருவரும். வாயிலென்னப் பூட்டென்ன மதி லென்ன விளங்கும் மனையென்னும் பெயர்க்குரிய மர பொன்றும் இன்றி, நெருப்பொன்று மட்டுமே கொழுந்து விட்டெரியும் வெட்டவெளியே முனிவனின் இருப்பிடமாக இருந்தது. இருப்பிடத்தை அடைந்த இனிய தவமுனிவர் நெருப்பு நன்கு கனிந்து சுடர் விட்டு எரிவதற்கு நிமல விற கடுக்கினார். கனன்று எழுந்த நெருப்பு எங்கே தன்னைக் காட்டிக் கொடுத்துவிடுமோ என்று அஞ்சி, முனிவன் வேடம் புனைந்த இளைஞன் சற்று உளங்கூசிக் கூனிக் குறுகினான் அந்நிலையில் இளைஞனை நோக்கி தவமுனிவர் மைந்தர்! இனி நடக்க வழியுமில்லை; இதுவே நம்மிடம். இக்கனலருகே பனிபொழியும் வழிநடந்த பனிப்பகலப் பல மூலங்களை புசிக்கப் பறக்கும் உனது இளைப்பு' என்று கந்த மூலக் கனிகளை அவன் அருகில் வைத்தார். மேலும் அவர் நாவினால் விரற்கடைத் துாரத்தைக் கடக்க முடியாதவர் கடலையும் மலையையும் தாண்டியலைகின்றார்கள். என்னே மனிதரின் மூடமதி இருந்தவாறு?' என்று கூறினார். இதற்கு மறுமொழி யொன்றும் மொழியாதிருந்த இளைஞனை நோக்கி உனக்கு ஏன் கூச்சம்? நம் இருவரில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/258&oldid=856409" இலிருந்து மீள்விக்கப்பட்டது