பக்கம்:மனோன்மணீயம்.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவகாமி சரிதம் 25% பெரியt சிறியர் என்று வேறுபாடு காணவேண்டா; நெரும் பருகே சென்று குளிர் காய்ந்து உன் அயர்வைப் போக்கில் கொள்! ஏனெனில் சேர்ந்தார்க்குக் களிப்பும் சேராதார்க்கும் பனிப்பும் உதவும் நெருப்பு' என்று இரங்கி இரண்டு முறை இயம்பியும், தன்னருகேவாராது எதிரொன்றும் இசையாமன் மனமிறந்து புறமொதுங்கி மறைந்து வறிதிருந்த மகன் மலைவு தெளியப் பலவகைகளிலும் முயன்றார். ஆயினும் அவர் பகர்ந்த நய உரைகள் இளைஞன் செவியில் ஏறவில்லை; பாதி முகத்தினை ஒரு பதும மலர் போன்ற கைகளால் மறைத்துக் கொண்டு, சுவரோவியம் போல் சுந்தரமாகத் தோன்றிய இளைஞனைப் பார்த்து, சிந்தை நொந்து முனிவர் எலி பிடித்து அலைக்குஞ் சிறுபூனை போன்று அடங்கி ஓங்கி எரிந்து ஒளி தந்த நெருப்பின் ஒளியில் இளைஞனைக் கூர்ந்து உற்று நோக்கினார். மொழியாதும் புகலாது விழிமாரி பொழிய முகங்கவிழ்ந்து நிற்கும் இளைஞனை நோக்கி, முனிவர் கூறுவார்: "எழில் நிறைந்த இளமையில் உனக்கு ஏற்பட்ட இடையூறுகள் உன்னை இந்தக் கோலம் புனையச் செய்தனவா? உனக்குக் கவலை என்ன? அரும் பொருளை இழந்தனை யா? அரிய நண்பர்களை இழந்தனையா? காதல் கொள நீ விழைந்த மாது பெருஞ் சூதாய் உன்னைக் கைவிட்டுக் கழன்றனளா? யாது உன் குறை? மெய்யாகச் சொல். இந்த உலகத்தில் உறும் சுகமனைத்தும் எதிரே தெரியும் இத்தீயில் தோன்றி மறையும் நிழல் போன்றவையே? கையாரும் பொருளென் னக் கருதி, மணல் வகையைக் காப்பதெல்லாம் இலவுகிளி காத்தலினும் வறிதே! நண்பர்களும் உறவினர்களும் நம்மை நாடி உறவாடுவது, நறு நெய்க்குடத்தை நாடி மொய்க்க வரும் எறும்பு போன்றதே. பெண்கள் அகக் காதலெலாம் பேசு முயற்கொம்பே! அவர்கள் உடலம் பெருங் கபடங் களின் கொள்கலமே!" என்றார். மெளனத வ முனிகள் மொழிந்த மொழிகள் இளைஞ னைக் கனவு கண்டு விழித்த கள்வன் நிலைக்கு ஆளாக்கின:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/259&oldid=856411" இலிருந்து மீள்விக்கப்பட்டது