பக்கம்:மனோன்மணீயம்.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

258 மனோன்மணியம் கையொடு பட்ட கள்வன் போன்று வெட்கி முகம் வெளுத் தான். நாணத்தை ஆபரணமாகப் பூண்டிருந்த அந்த இளைஞனை மீண்டும் நோக்க, அந்த இளைஞனின் வேஷ ரகசியங்கள் வெட்ட வெளியாயின. உண்மை பெறு கண்ணி னைகள் பெண்மை யுருவினைத் தெரிவித்தன. இவ்வித மாகத் தன்னைப் பெண்ணென இப்பொழுது வெளிப்படுத் திக் கொண்ட மங்கை எழுந்து, முனிவன் தாளினை வணங்கி தெய்வமோடு நீ வாழும் திருக்கோயிலின் துாய்மைக்கு மாசு புகுத்திவிட்ட என்னை மறாது மன்னியுங்கள்' என்று கூறி விட்டுத் தன் கதையைச் சொல்லலுற்றாள்.

  • மண்ணுலகில் காவிரிப்பூ மாநகரில் வணிககுல திலக மாக வாழ்ந்தாள் ஒரு மங்கை. இவள் வயிற்றில் இரண்டு பெண்களும் ஒரு மகனும் பிறந்தனர். இரண்டு பெண்களில் ஒருத்தி முழு மலடி: ஆயினும் செப்பறிய செல்வமுடையவள்: பிறிதொருத்தியின் மகளே யான்; ஒப்பரிய புருடர்க்கு ஒர் ஆண்மகவு பிறந்தது. மாமன் முறையுடைய அந்தப் பிள்ளை யும் தானும் இளவயது தொடங்கி உடல் பிரியா நிழல் போல் ஒன்ர்r வளர்ந்தோம். அவர் அடல் பெரியர்: அருளுருவர் அலகில் வடிவுடையர்: அவர் திருப்பெயரை யான் கூறல் அடாது” என்று கூறிய அளவில், முனிவனின் உடல்: சிலிர்த்தது; கண்களில் கண்ணிர் வடிந்தது. எரிக்க விறகு எடுப்பவன் போல் எழுந்து சென்று விழிகளில் வழிந்த நீரைத் துடைத்துக் கொண்டார்.

இளம் பிடி மேலும் தன் கதையை எடுத்து மொழியத் தொடர்ந்தான்; மலடியாகிய என் சிறிய தாய், தனக்கு மகவில்லாததால் தான் படைத்த செல்வம் அனைத்தையும் எனக்கே தந்தாள். பாவி நான் அச்செல்வத்தால் மதிமயங்கி நிலைதடுமாறி அவரை மதிக்க மறந்தேன். அவர் குறிப்பால் என் தவற்றினைச் சுட்டிக் காட்டியும் உணர்ந்தேனில்லை : மாறாக வெறுத்தேன். அவர் இதற்கு வேதனைப் பட்டு வெதும்பி இறுதியில் ஒரு நாள் என்னை விட்டே போய் விட் டார். அதன் பின் மணப் பருவத்தில் இருந்த என்னை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/260&oldid=856415" இலிருந்து மீள்விக்கப்பட்டது