பக்கம்:மனோன்மணீயம்.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனோன்மணி 263 இல்லை என்றும், அன்பே உயிராகவும், அழகே உடம்பாக அம், மண்ணுலகு செய்த மாதவத்தால், மண்ணிடை மலைமகள் அருளும் கலைமகள் உணர்வும் கமலையின் ாழிலும் கொண்டு, பாண்டியன் குலமாகிய பாற் கடலின் மீது அமுதமெனப் புறப்பட்ட நிறை நிலா மனோன்மணி ான்றும் குறிப்பிட்டு அவளை வாழ்த்தாதவர் வையகத்தில் யாரே? என்ற வினாக்குறியினை மூன்றாம் நகரவாகி ாழுப்புகின்றான்.: அப்பகுதி வருமாறு: ஐய மற்ற தற்கென்? யார்பரி வுறார்கள்? வையகத் தவள் போல் மங்கைய ருளரோ? அன்பே உயிரா அழகே யாக்கையா மன்பேர் உலகுசெய் மாதவம் அதனால் மலைமகள் கருணையும் கலைமகள் உணர்வும் கமலையின் எழிலும் அமையவோர் உருவாய் பாண்டியன் தொல்குலம் ஆகிய பாற்கடல் கீண்டெழு மதியென ஈண்டவ தரித்த மனோன்மணி யன்னையை வாழ்த்தார் யாரே? (அங்கம் 1 : களம் 1, 117-135) மேலும், இமையவர்க்காக முன்னொரு வேள்வி நடத்தப் பெற்ற பொழுது தவசிகள் தனித்தனியாக அவி கொடுத்தும் வேள்வித் தீ பற்றி எரியாது அவிந்தது. ஜீவக னும் குடிலனும், மற்றுளோர் யாவரும் தளர்ந்து மனம் தளர்வுற்றிருக்க, மனோன்மணி விளையாட்டாகப் பெய்த நெய் நெடுஞ் சுழி சுழித்துப் பொங்கி எழுந்தது; மாதவர் மகிழ்ந்தனர். அன்றிலிருந்து யாவரும் மனோன்மணியை மதித்து வணங்குகின்றனர்" என்று இரண்டாம் நகரவாகி குறிப்பிடுகின்றான்.


விளையாட் டாக மைதிகழ் கண்ணி பேதை மனோன்மணி நெய்பெய் போழ்தில் நெடுஞ்சுழி சுழித்து மங்கிய அங்கி வலமாய்ப் பொங்கிப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/265&oldid=856425" இலிருந்து மீள்விக்கப்பட்டது