பக்கம்:மனோன்மணீயம்.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

264 மனோன்மணியம் புங்கவர் மகிழ்ச்சியைப் பொறித்தது முதலா முனிவர் யாவரும் மணியென மொழியில் தங்கள் தலைமிசைக் கொள்வர். தரணியில் எங்குளது அவட்கொப் பியம்புதற் கென்றே. நான்காம் நகரவாசி இரண்டாம் நகரவாசியின் கூற்றினை அப்படியே முழுதும் ஏற்றுக் கொள்வதோடு, மேலும் ஒருபடி சென்று கரும்பும் கைக்கும் இன்மொழிக் கன்னியாம் மனோன்மணிக்கு ஒப்பேதும் உரைக்க இயலாது" எனக் கூறி அமைகின்றான்: ஒக்கும்! ஒக்கும்! இக்குங் கைக்கும் என்னும் இன்மொழிக் கன்னிக் கெங்கே ஒப்புள துரைக்க...... இவ்வாறு நாடகப் பேராசிரியர் சுந்தரம்பிள்ளை அவர்கள், நாடகத் தொடக்கத்திலேயே மனோன்மணிபால் எல்லோரும் கொண்டுள்ள நல்லெண்ணத்தினையும் நல்லன் பி. னையும் நயமுற நலமுற நவின்றுள்ளார். ஈண்டுக் குறிப்பிடப் பெற்று சுந்தர முனிவரும் நகரவாசி களும் மட்டும்தான் என்பதில்லை. எடுப்பார் கைப்பிள்ளை பாய் விளங்கும் ஜீவகன், மனோன்மணி விரும்பியது உரைத் தால் அஃது அம்புலியாயினும் கொணர்வதாகக் கூறுகிறான்: கற்றுவனாயினும் மனோன்மணியை வருத்தின் அவனையும் மாய்விப்பேன் என்கிறான். மேலும் மனோன்மணி பிறந்த பின்னரே அவள் மழலை கேட்டு மிடிநீங்கி மகிழ்ச்சி மிக்கு. அவளுக்கு உதவவே உயிர் தரித்திருப்பதாகப் குறிப்பிடு கின்றான். முனிவன் முயன்ற வேள்வியான் பிள்ளைக் கனியென உனையான் கண்ட நாள் தொட்டு கின்முகம் நோக்கியும் கின்சொற் கேட்டும் என்மிடி நீங்கி யின்பம் எய்தி -- உன்மன மகிழ்ச்சிக்கு யுதவுவ உஞற் உயிர்தரித் திருக்தேன். *

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/266&oldid=856427" இலிருந்து மீள்விக்கப்பட்டது