பக்கம்:மனோன்மணீயம்.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனோன் மணி 265 இது போன்றே போர்க்களத்தில் ஜீவ கனைக் காப்பாற்ற முற்படும் -அறிவு வழிச் செயல்படும்-நாராயணனும், தாய் மனோன்மணி நிலை கருதுவர் உன்னலம் கருதா தென் செய்வர்?’ எனக்கூறி, மனோன்மணியினைத் "தாயெ னப் போற்றியுரைக்கின்றான்! பிறிதோரிடத்தில் மதிகுலக் கொழுந்து மனோன்மணி" என்கிறான். நகரவாசிகள் மனோன்மணியினை நேரிற் காண வாய்ப் புண்டு; அவள் செயலை-நலனை அறிய இடமுண்டு. ஆயினும் நாட்டுப்புறங்களில் வயல் உழும் உழவர்களும் மனோன்மணியின்பாற் பெரும்பரிவு கொண்டுள்ளார்கள் என்பது நாடகத்தின் மூன்றாம் அங்கம், இரண்டாம் களத் தில் வெளிப்படுகின்றது. முதல் உழவன், o தாயினுஞ் சிறந்த தயாநிதி மனோன்மணிக்கு உறுதுயர் ஒருவரும் ஆற்றார் : என்று பேசுகின்றமை காண்க. அவ்வளவு ஏன்? நாடகத்தில் நாம் வெறுக்கும் கொடு மனக் குடிலனும் அவன் மகன் பலதேவனும்கூட அன்றோ மனோன்மணியைப் பற்றி நலமுற மொழிகின்றனர்! பலதேவன் புருடோத்தமனிடத்தில் மனோன்மணியைப் பற்றிக் குறிப்பிடும்பொழுது, ............உசிதன் மனையில் திரைக்கடல் அமுதே யுருக்கொண் டதுபோல் ஒருமலர் மலர்ந்து அங்கு உறைந்தது என்று பாற்கடல் பிறந்த பால் நிலா என மனோன்மணியைக் குறிப்பிடுகின்றான். அவன் தந்தை குடிலனோவெனில், திருவினுஞ் சீரிய உருவினள்" என்று குறிப்பிடுகின்றான். போர் வீரர்களும் "இளவரசிக்கு ஜே! ஜே!” என்று ஆர்ப்பரித்து உற்சாகம் கொள்கின்றனர். நிகரில் புருடனாம் புருடோத்தமன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/267&oldid=856429" இலிருந்து மீள்விக்கப்பட்டது