பக்கம்:மனோன்மணீயம்.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

272 மனோன்மணியம் இவ்வாறு தந்தையிடமும் தாய்நாட்டிடமும் கொண்ட அரிவில் காதலைக் கடமையில் மறந்து தன்நிலை தளர்ந்து சாய்கிறாள்; மூச்சில்லை; பேச்சில்லை; வியர்வை வடி கின்றது. இட்டகை இட்டகால் இட்டபடியே உள்ளன: அந்நிலையிலும் வாணியை மறவாது வாணி நடராசனை மணக்க அனுமதியளிக்குமாறும், நாராயணனைக் கடுஞ் சிறை நீக்குமாறும் அரசனை வேண்டிக் கொள்கின்றாள். இவ்வாறு மனோன்மணி தன் துயர் பொறுத்துப் பிறர் துன்பம் களைதலின் காரணத்தை அவளே சொல்கின்றாள்: அடுத்தவர் துயர்கெடுத் தளித்தலே யானிங்கு எடுத்தகற் றவத்தின் இலக்கணம் ஆதலின் கடேசனை நச்சுகின் நன்மணம் அதுவும் விடாதெனை அடுத்த வீரகா ரனன்றன் கடுஞ்சிறை தவிர்த்தலும் கடனெனக் கருதி எழுதினேன் இஃதோ வழுதியும் இசைந்தான். இவ்வாறு பிறர் நன்மை பொருட்டுத் தன் காதலைத் தியாகம் செய்ய முன்வரும் மனோன்மணி, காதலில் கால் கொள்ளாத மனத்தினளா என்றால், இல்லை யெனலாம். ஏனெனில் மனோன்மணி மண மாலை கொண்டு பலதேவன் எதிர் வரும் பொழுது சுருங்கை வழியே வந்த புருடோத் தமனைக் கண்ட அளவிலேயே அவளையறியாமல் அவள் கால்கள் அவன் நிற்குமிடம் நோக்கி விரைவில் நடந்து, “இங்கோ நீயுளை 1 என்னுயிர் அமிர்தே!' என்ற புருடோத் தமன் கூறித் தலை தாழ்ந்த அளவிலே, அவன் கழுத்தில் மாலை சூட்டி அவன் தோளோடு தளர்ந்து மூர்ச்சிக் கிறாள்; இச் செயல், - - புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான் நட்பாங் கிழமை தரும். என்ற குறட் கருத்திற்கேற்பக் காண்டகைமை யின்றியும் அவர்கள் இருவரிடை மலர்ந்த காதல் பெற்றியினையும் ஆற்றலினையும் அறிவிக்கின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/274&oldid=856444" இலிருந்து மீள்விக்கப்பட்டது