பக்கம்:மனோன்மணீயம்.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனோன் மணி 273 "காதல் என்பது ஒரு கனவு; தன்னலமற்ற தவமே அன்பின் பெருக்கம். இவ்வாறு மனோன்மணி முதலில் கருதுகிறாள். இயற்கையின் பொருத்தம் ஒருவரை ஒருவர் காணா முன்பே கன வின் வழியே திருத்தமுற்றுத் திகழ்ந் தோங்கி கடவுட் காதலாக அவள் உள்ளத்தே சிறந்தொளிரி மெது. உயிரினும் சிறந்த காதலினையும் தந்தைக்கும் தன் நாட்டிற்கும் எனப் பலி கொடுத்துழைக்கும் தொண்டு வாழ்வே தவ வாழ்வு என்ற முடிவு, அவள் உள்ளத்தினைப் பிளந்து கொண்டெழுந்து பற்றி எரிகிறது. இத்தகைய காதலை இவ்வாறு பறிகொடுத்தோருக்கே உண்மைக் காதல் இன்பம் ஒப்பிலாத பயனாக அவரது தப்பிலாத வாழ்க்கையில் தானே வந்து எய்தும். இதனைமே மனோன்மணி வாழ்க்கையில் காண்கின்றோம். இவ்வாறு தமிழறிஞர் தெ. பொ. மீ அவர்கள் குறிப்பிடுகின்றார். நாடகத்தில், மனோன்மணி, அன்பின் செல்வியாய், அறத்தின் விளக்கமாய், பண்பின் பெட்டகமாய், காதலின் கனியாய், இரக்கத்தின் ஊற்றாய், தியாகத்தின் சிகரமாகிதி சுடர்விட்டு ஒளிவீசி நிற்கின்றாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/275&oldid=856446" இலிருந்து மீள்விக்கப்பட்டது