பக்கம்:மனோன்மணீயம்.pdf/276

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. வாணி இவள் ஒழுக்கம் தவறா உளத்தள்; தனக்கு நன்றெனத் தெள்ளிதில் தெளிந்தவையையே நம்புந் திறத்தள்: அல்லன. வற்றை அகற்றும் துணிபுமுடையவள். -பேராசிரியர் சுந்தரம் பிள்ளை மனோன்மணிய நாடகத் தலைவி மனோன்மணிக்கு உற்ற உயிர்த் தோழி வாணி. இவள் ஒழுக்கம் தவறா உளத்தள்; தனக்கு நன்றெனத் தெள்ளிதில் தெளிந் தவையையே நம்புந் திறத்தள்: அல்லனவற்றை அகற்றும் துணிபுமுடையவள். அன்பின் ஆழம் இவள் உள்ளம்: அழகின் திரட்சி இவள் உடல்; பண்பின் பெட்டகம் இவள் வாழ்வு: காதலின் துடிப்பே இவள் உயிர்மூச்சு: தீமையை எதிர்த்து நிற்கும் துணிவே இவள் போக்கு: சோர்வினைத் துடைக்கும் இவள் வாக்கு: துன்பக்கடலைக் கடக்கும் தோணி இவள் பேச்சு. அறிவின் கொழுந்தாய், அழகின் விருந்தாய், அன்பின் ஊற்றாய், காதலின் மணிமுடியாய், இசையின் இனிமையாய், நட்பின் இலக்கணமாய்த் துலங்கியதே வாணியின் வாழ்வெனலாம். இயற்கை அழகில் தன் னை மறந்து ஈடுபடும் நடராசனை இவள் நெஞ்சாரக் காதலிக்கிறாள். நேரடியாக இருவரின் காதற் பேச்சுகளும் செயல்களும் உணர்த்தப்படவில்லை. முன்னர் நிகழ்ந்த நிகழ்ச்சியினை இருவரும் எண்ணிப் பார்த்து மகிழ்வதும் கலங்குவதும் பின் துணிவதுமாக உள்ள போக்கில் இவர்கள் காதல் வளர்ந்து செல்கிறது. இஃது ஒரு புதுமை எனலாம். இதனினும் புதுமையன்றோ மனோன் மணி-புருடோத்தமன் காதல்! --- முதன் முதலாக மனோன்மணியும் வாணியும் கன்னி மாடத்தில் கழலாடும் நிலையில் அவர்களைச் சந்திக்கிறோம். அவர்கள் பாடும் பாட்டே காதலின் வன்மை மென்மைகளை ஆயும் போக்கில் அமைந்து விடுகிறது. காதலே வாழ்வு என

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/276&oldid=856448" இலிருந்து மீள்விக்கப்பட்டது