பக்கம்:மனோன்மணீயம்.pdf/277

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாணி 275 எண்ணி அக் காதற் கடலில் மூழ்கிக் குளித்து முத்தெடுக்கும் வாணி, காதலின் பேராற்றலினை அனுபவத்தின் வழி நன்கு உணர்ந்தவளாதலின், காதலின் பெற்றி குறித்துப் பெருமை பட இசைப் பாட்டில் முழங்குகின்றாள். இறைவன்மேல் மலர்க்கணை செலுத்திய மன்மதன் நீறான நிகழ்ச்சியினை மனோன்மணி சொல்ல. வாணி அம் மன்மதன் நீறாகிப் போனாலும், அவன் எய்த மலரம்பு சிவன் நெஞ்சில் ஆறாத வடுவினை யன்றோ அமைத்துவிட்டது” என்று எதிர் மொழி ன்ெறாள். இவ்வாறு பாடிவரும்பொழுது, அவள் காதலன் நடராசன் நினைவு வந்து வந்து மோதுகின்றது; இறுதியில் பெருமூச்சோடு வெளிப்பட்டும் விடுகின்றது. உருவங் கரந்தாலென் ஓர்மல ரம்பினால் அரையுரு வானாரென் றாடாய் கழல் (அக்கட ராஜரென்)றாடாய் கழல் இதனைக் கேட்ட மனோன்மணி ஒதிய பாட்டில் ஒரு. பெயர் ஒளித்த கள்ள உள்ளத்தைக் கண்டுபிடித்து மன்றலு மானது போலும் வார் குழலே என வாணியை நகையாடு கின்றாள். அதற்கு மறுமொழி கூறும் வாணியின் பேச்சில் அவள் சொற்சாதுரியத்தினைக் காண்கின்றோம். பெருமூச்சு எழுந்ததற்குக் காரணம் ஒரு பொருளினையும் நெஞ்சில் நினைத்தமை அன்று என்றும், இச்சகத் தெவரே பாடினும் உச்சத் தொனியில் உயிாப்பெழல் இயல்பே என்றும் மறைத்து மொழிகின்றாள். அடுத்துக் காதலன் நேற்று ஒதிய தென்னை உரையாய் எனக்கே" என்று கேட்ட மனோன்மணியிடம், வானி, எருதீன் றெனுமுனம் என்னகன் றென்று திரிபவ ரொப்ப 8 செப்பினை என்று விடையிறுக்கும் விரகிலும் வாணியின் அறிவாற்றலும் சொல்வன்மையும் துலக்கமுறுகின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/277&oldid=856450" இலிருந்து மீள்விக்கப்பட்டது