பக்கம்:மனோன்மணீயம்.pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

276 மனோன்மணியம் வாணி நல்ல அழகி என்பது மனோன்மணி பேச்சுக்குப் பேச்சு அவளைப் பெரிதும் புகழ்ந்து பேசுவதனின்றும் அறிய லாம். காதள வோடிய கண்ணாய்" என்றும், எட்பூ ஏசிய நாசியாய்' என்றும் முல்லையின் முகையும் முருக்கின் இதமும் காட்டும் கைரவ வாயாய்" என்றும், காந்தள் காட்டும் கையாய் என்றும் வாணி மனோன்மணியால் வர்ணிக்கப்படுகின்றமையை நோக்கும்பொழுது, வாணியின் பேரழகு நம் மனக்கண்முன் பளிச்சிடுகின்றது. உருவ அழகில் மட்டுமா வாணி அழகி? இசையரசி அல்லவோ அவள்? கண்டோ எனும் மொழிக் காரிகை யணங்கே என்றோர் இடத்தில் மனோன்மணி வாணியை விளிப்பதுபோன்று, அவள் குரல் ஊனினை உருக்கி உள் ளொளி பெருக்கி உவப்பிலா ஆனந்தத் தேனினை'ப் பாய்ச் சுவதாக உளது. எனவேதான் சிவகாமி சரிதத்தை வாணி பாடிமுடித்தவுடன் மனோன்மணி, வாணி மங்காய் பாடிய பாட்டும் - வீணையின் இசையும் விளங்குகின் குரலும் தேனினும் இனியவாய்ச் சேர்ந்தொரு வழிபடர்ந்து ஊனினையும் உயிரினையும் உருக்கும் ஆ! ஆ! என்று வியந்து, புகழ்கின்றாள். நாடக இறுதியில் ஒரு துன்பச் சூழ்நிலையில் மற்றவர் மனக்கவலை மாற்றிட, மன்னன் தன்னைப் பாவொன்று இசைக்கச் சொன்ன நிலையில், அவள் அடிமனத்தின் ஆழத் திலிருந்து குமுறிக் குமுறிக் கொந்தளித்துக் கொந்தளித்து உயிர்நிலைப் பாட்டொன்று பிறக்கிறது. o ர்ேகிலையின் முதலையின்வாய் கிலைகுலைந்த ஒருகரி முன் ஒர்முறையுன் பெயர்விளிக்க உதவினை வங் தெனவுரைப்பர் ஆர்துயர அளக்கர்விழும் அறிவிலியான் அழைப்பதற் குன் பேர்தெரியேன் ஆயிடினும் பிறகிடல்கின் பெருந்தகையே! இவ்வாறு பாடியதைக் கேட்ட கந்தரர், பாட்டின் பொருத்த மும் குரலும் நோக்கி, எதுவோ, இதனினும் ஏற்புடைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/278&oldid=856452" இலிருந்து மீள்விக்கப்பட்டது