பக்கம்:மனோன்மணீயம்.pdf/281

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாணி 279. இவ்வாறு தன் காதலை வெளிப்படக் கூறாமல் மறைத்த வாணியின் காதல் சங்க இலக்கியக் காதலாம். ஆடவரே காதலை வெளிப்படப் பேசுவர்; பெண்கள் குறிப்பாகவே மொழிவர். ஆடவர் காத லறைதலும் தையலர் கூடமாய்க் கொள்ளலும் இயல்பே போலும் என்று நடராசனே வாணியின் குணமேம்பாட்டினைக் குறிக்கின்றான். ஜீவகன் வாணியின் தந்தை சகடர் சொற்கேட்டு வாணியை மருட்டுகிறான்; அவள் காதல் தகாது என்கிறான்; தந்தை மனத்தின்படி மணம் பெறுவதே முறை என அச்சுறுத்திப் பார்க்கின்றான். நேசமில் வதுவை நாசகா ரணமே என எடுத்து மொழிகிறாள்; பழைய புராணம் படிக்கிறான் ஜீவகன் : - புதுமை புகன்றாய்! வதுவைமங் கையர்க்குப் பெற்றோர் ஆற்றுவர்; ஆற்றிய வழியே தையலார் மையலாய் கேயம் பூண்டு வாழ்வது கடமை, அதனில் தாழ்வது தகுதியோ தருமமோ சாற்றே என்று கடமை என்றும், தகுதி என்றும், தருமம் என்றும் பலப்பலப் பேசுகிறான் ஜீவகன். . A அவன் கருத்தினை அமைதியோடு, அதே நேரத்தில் உள்ள உறுதியோடு எதிர்க்கிறாள் வாணி. அன்பு ஆக்கப் படும் பொருள் ஆகுமோ?’ என்று அவனை வினவுகின்றான். மேலும், - கின்ற காதலின் கிலைமை. கினைவில் = இரும்பும் காந்தமும் பொருங்துக் தன்மைபோல் இருவர் சிந்தையும் இயல்பா புருகி ஒன்றாங் தன்மை யன்றி ஒருவரால் ஆக்கப்படும்பொரு ளாமோ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/281&oldid=856462" இலிருந்து மீள்விக்கப்பட்டது