பக்கம்:மனோன்மணீயம்.pdf/291

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. குடிலன் -(அவன்) மத்திரி குடிலன் என்பவன் ஒப்பற்ற, சூழ்ச்சித் திறமையுடையவனாயினும் முற்றும் தன்னயமொன்றே கருதும் தன்மையனாயிருந்தான். -பேராசிரியர் சுந்தரம் பிள்ளை மனோன்மணிய நாடகத்தில் தொடக்கம் முதல் இறுதி வரையில் இணையற்ற பங்கு கொள்பவன் குடிலனே. இவன் சூழ்ச்சியினை மையமாகக் கொண்டே கதை சுற்றிச் சுழன்று வருகின்றது. மண்ணைப் பிசைந்து தன் மனம் போனவாறு வடிவம் சமைக்கும் குயவனின் கைவண்ணம் போன்று, குடிலனின் கொடுர மனத்தினின்றும் பீறிடும் எண்ணங்கனே நாடகத்தில் வரும் பாத்திரங்கள் பலவற்றினையும் ஆட்டிப் படைக்கின்றன. இதற்கு விதிவிலக்காகப் பலரி வரலாம். ஆனால் மன்னன் ஜீவகனைத் தன் மனம் போனபடி ஆட்டி வைக்கும் அவனுடைய தனித் திறமையாலே வீறு நிறைந்த மம்மப் பாத்திரங்களும் சற்றே தடுமாற வேண்டியுளது. குடிலனின் சூழ்ச்சிப் புயலில் சிக்கித் திகைப்பவர் பலர். நாடகத் தொடக்கத்திலேயே குடிலனை நாம் காண் கின்றோம். நீண்ட நெடும்பேச்சினைப் பேசிச் சுந்தர முனிவரிக்கு வெறுப்பூட்டுபவனும் அவனே. பீடுயர் நெல்லைக் கோட்டையினை அமைத்தவன் அவனே. இதற் காகப் பழமதுரையினின்றும் பாண்டியைைசப் போக்கி நெல்லைக்குக் கொணர்ந்தான். பாண்டியனின் அரியனை பின் மீது அவனுக்கு அளவில்லாத ஆசை. தக்கதருணம் நோக்கித் தவித்திருக்கிறான் குடிலன். கோட்டையை முனிவர்க்குக் காட்டி வா என்கின்றான் மன்னன். சுந்தர முனிவருக்கு முகமன் கூறி, நீயறியாத தொன்றில்லை' என்று சுந்தர முனிவரைப் புகழ்ந்து பேசுன தோடு அமையாது, எந்திரப்படைகளும் தந்திரக் கருவிகளும் நிறைந்த கோட்டையின் இயல்பினை வருணிக்க முற்படு:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/291&oldid=856484" இலிருந்து மீள்விக்கப்பட்டது