பக்கம்:மனோன்மணீயம்.pdf/290

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

288 மனோன்மணியம் இறுதியில் குடின்ை பேச்சால் பலதேவனை மணந்து கொள்ளு மாறு தன் மகள் மனோன்மணியை வேண்டுகிறான். மங்கையரி மனத்திற்கு மதிப்பளிக்காத பழைமையுள்னம் ஈண்டுப் புலனாகின்றது. கனிந்த நெஞ்சு, சிறந்த ஒழுக்கம் இவையிருந்தும் முதிர்ந்த பேரறிவின்றிப் பழைமைக்கு அடிமையாய்ப் புதுமைப் போக்கின்றி, நல்லவர்களைத் தீயவர்களாய், தியவர்களை நல்லவர்களாய், நண்பர்களைப் பகைவர்க ளாய், பகைவர்களை நண்பர்களாய் எண்ணி மதிமயங்கும் மனநிலையிலேயே மதிகுல மன்னவன் ஜீவகன் மனோன் மணிய நாடகத்தில் வருகின்றான். நாடக இறுதியிலும் குடிலனைக் கையும் மெய்யுமாகக் கைவிலங்கோடு கண்ட நிலையிலும், குடிலன் சூழ்ச்சியினைத் தெளிந்த நிலையிலும், ஜீவகன், குடிலா உனக்குமிக் கெடுதி யேன்? ஐயோ!' என்றே அலறுகின்றான். அரசனின் அப்பாவித்தன்மை ஈண்டும் புலனாகின்றது. குடிலனே தன் நன்னலம் கருதுபவன் என்று கொண்டு, அவன் கூற்றின்படியே நடந்து, அவன் ஆட்டிவைக்கும் பாவையாகவே ஜீவகன் மனோன்மணிய நாடகத்தில் தோன்றுகின்றான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/290&oldid=856482" இலிருந்து மீள்விக்கப்பட்டது