பக்கம்:மனோன்மணீயம்.pdf/295

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குடிலன் 293 நிலையினை உணர்கிறார் முனிவர். சேரனே மனோன் மணிக்குத் தகுந்த மணமகன் என எடுத்து மொழிகிறார் கந்தரர்; புருடோத்தமனிடம் மன்றல் துாது செல்லத் தகுந்தவன் நடராசனே எனத் துணிகிறார் சுந்தரர், மன்னனிடத்தும் தன் கருத்தைச் சொல்கிறார். ஆயினும் இங்கும் குடிலனின் வஞ்சனையே வெற்றி முரசு கொட்டு கிறது. சேரனின் உறவை வெட்டும் உன் நோக்கில் தன் மகன் பலதேவனையே புருடோத்தமனிடத்தில் துாது அனுப்புகின்றான் குடிலன். மன்னன் மகள் மனோன்மணி தன் மகன் பலதேவனுக்கு உரியவளானால் இராச்சியமும் நம்முடையதாகுமே என இடையில் ஒர் எண்ணம் குடிலன் மனத்தில் பளிச்சிடுகின்றது. மனோன்மணியிடம் தன் மகன் பலதேவனை அடிக்கடி அனுப்பி வைத்தால் காதல் பற்றிக் கொள்ளும் என்று கணக்குப் போடுகிறான் குடிலன். அருகுள தெட்டியே யாயினும் முல்லைப் படர்கொடி படரும் பலதே வனையவள் இடமே பலமுறை யேவி லுடன் படல் கூடும் என்று குடிலன் தனக்குள் பேசிக்கொள்ளும் கூற்றில் அவனது உளவியல் நுட்பம் புலனாகிறது. துர்து சென்ற பலதேவன் விரைவில் திரும்பி வராதது கண்ட குடிலன், முன்னெச்சரிக்கையாக வஞ்சி வேந்தன் தன் மகனை என்ன பாடுபடுத்துவானோ?" என்று ஜீவகனிடம் கூறிப் புருடோத் தமனைப் பழித்துப்பேசி மன்னன் மனத்தில் சேரன்பால் வெறுப்பு ஏற்பட வகை செய்கிறான். அதே நேரத்தில், தன் மகன்பால் மன்னன் பரிவுகொண்டு தன் மகளின் வலிமையை யும் வல்லமையையும் பாராட்டி மொழியச் செய்கிறான். மேலும் ஒருபடி சென்று, என்று மிப்படியே இவள்பணி விடையில் கின்று நம்உயிர் விடிலன்றோ நன்றாம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/295&oldid=856492" இலிருந்து மீள்விக்கப்பட்டது