பக்கம்:மனோன்மணீயம்.pdf/296

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

294 மனோன் மனிையம் என்று பலதேவன் மனோன்மணியின் பாதசேவையே பாக்கியம் என்று கருதியதாக நயமுற உரைக்கின்றான். இவையெல்லாம் குடில புத்தியின் கொடுர விளைவுகள். காமே அரசும் காமே யாவும் மன்னவன் கமது கிழலின் மறைந்தான் என்ற கூற்று அவன் தன்னம்பிக்கையின் ஊற்று. குடிலன் பிரபுத்துவம் தன்னலம் தழைத்தோங்கும் பான்மையில் வளர்ந்தோங்கியுள்ளது. சிலர் வாழப் பலர் துன்பம் ஏற்கவேண்டும் என்பது குடிலன் கண்ட சித்தாந்தம். குடிலனுக்கு மனம் உண்டு. ஆனால் அம்மனத்தில் அனைத்துயிரிக்கும் அன்பு பாராட்டுகின்ற பண்பு இல்லை. செயலின் வித்தினையும் அதன் விளைவினையும் நன்கு அறிந்தவன் அவன். போர் மூள்கிறது. குடிலன் தன் மனத்தோடு பேசிக் கொள்கிறான். ஒருவனது ஆசைப் பெருக்குப் பலரைப் பாரில் மடிவிக்கும் என நன்கு தெளி கின்றான். - ஒருவன தாசைப் பெருக்கால் உலகில் வருதுயர் கடலில் பெரிதே னன்றும், போர் நிகழ்ந்தால், கின்றவிவ் வீரரை ஒன்றிய மனைவியர் உற்றார் பெற்றார் கட்டார் என் றிப் படியே பரவும் படியெலாம் துன்பம் என்று தன் பேராசைப் புயலுக்குப் பலியாகப் போகும் உயிரிகளின் துன்பத்தினையும் உன்னிப் பார்க்கின்றான். ஒரு கணம் தயங்குகின்றான்; மனித மனம் பெறுகின்றான். ஆட்டங் கண்டு அயர்ந்து நின்ற மனம் ஒட்டங் காண்கிறது; மீட்டும் குடிலபுத்தி குடிபுகுந்து கொள்கின்றது. இதோ குடிலன் பேசுகின்றான்: பலபெயர் துக்கப் பட்டா லன்றி உலகில் எவரே ஒருசுக மணைவார்? அம் மட்டோ? நல்லது நினைக்கும் தன் மனத்தையே கடிந்து கொள்கிறான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/296&oldid=856494" இலிருந்து மீள்விக்கப்பட்டது