பக்கம்:மனோன்மணீயம்.pdf/305

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர முனிவர் 303 இந்துவின் குலமெனும் முந்திய பெயர்போய்ச் சுந்தரன் குலமெனச் சந்ததம் வழங்கும் பறு நன்றிப் பெருக்குடன் நாத்தழுதழுக்கப்பேசுகின்றான். இறுதியில் மனோன்மணி பலதேவனை மணக்க வேண்டியநிலை குடிலன் சூழ்ச்சியால் உருவாகின்றது வாணி வருந்திப் பாடுகிறாள். அதுவே ஏற்புடைப் பிரார்த்தனை ாண்கிறார் சுந்தரர். கையில் மணமாலையை எடுத்துக் கொண்டு மனோன்மணி பலதேவனுக்கு மாலை சூட வரு விண்மாள். அந்நிலையிலும் நெஞ்சம் பதறாமல் நிலை கலையாமல், * ஒரு தனி முதல்வன் உணர்வன் உன்னுளம் உன்னன்பு உண்மையேல் இன்னமும் காப்பன் ான்று அமைதியாக இருக்கின்றார். தவ முனிவர் வாக்கும் பழுதுபடுமோ? இதுவும் ஜீவகன் நம்பிய குடிலப் பாய்மரம் போல் பழுதாகுமா என்ன? புருடோத்தமன் அந்நேரத்தில் கருங்கை வழியே வந்து மாலையிட, 'மங்கலம் மங்கலம் மங்கலம் உமககே" என மணமக்களை வாழ்த்தியருளுகிறார் அந்தர முனிவர். இவ்வாறு சுந்தர முனிவர் நாடகம் இன்பியலாக இனிது முடியக் காரணமாகிறார்; மன்னனையும் ம ைனன் மகள் மனோன் மணியையும் காப்பாற்றுகிறார். அருளே வெல்லும், ான்ற இவர்தம் நம்பிக்கையே இறுதியில் வெல்கிறது ஆண்டவனின் அருளாட்சி அவனியில் ஒளிரத் திருவருளே ைடில் என சுந்தரர் வருகின்றார். சுந்தர முனிவர் நாடகக் காப்பியத்தின் நல்லுறுப்பாய்ப் பொருத்தமுற அமைந்து பாவும் இனிதே முடியப் பெருந்துணை புரிகின் மார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/305&oldid=856524" இலிருந்து மீள்விக்கப்பட்டது