பக்கம்:மனோன்மணீயம்.pdf/304

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

302 மனோன்மணியம் என்று காதலின் பெற்றியினை உணர்த்துகின்றார்: மனோன்மணியின் துயர் தீரும் மார்க்கமும் மன்னனிடம் உரைக்கிறார்: திருவாழ் கோடாம் சேர தேசத்துப் பெரு விலாப் புருடனாம் புருடோத்தமனே பூங்கொடி படரப் பாங்காம் தரு' எனப் பக்குவமாக மொழிகிறார்; நடராச னைத் துர்தாகப் புருடோத்தமனிடத்தில் அனுப்பினால் மன்றல் வினையை மகிழ்ச்சியில் முடிப்பன் என்று வகையும் கூறுகிறார் சுந்தரர். * ஆயினும், சுந்தரர் கூறிய யோசனையைப் பழுதிலாக் குடிலன்" பழுதுபடுத்தி விடுகின்றான். முனிவர் ஜீவகனிடம் ஓர் அறையினைக் கேட்டுவாங்கி அங்கிருந்து கோட்டைக்கு. வெளியே போதற்குச் சுருங்கை வழி காண்கிறார். இச் சுருங்கை வழியினைக் குடிலன் கண்டதால் அவனுக்குக் கேடு வந்து சேர்ந்தது; அவ்வழியே அவனை விலங்கிட்டு அவன் பின்வந்த புருடோத்தமனுக்கோ கனவிலே கண்ட காரிகை யாம் மனோன்மணியை நனவில் தந்து நல்வினையாம் மணவினை மங்கலமாய் நடக்கத் துணை புரிந்தது. நூல் பல கற்ற நுண்ணறிவாளராம் சுந்தரமுனிவர் விரிந்த பேச்சினையும் விவாதப் போரினையும் சிறிது விரும் பாதவர். ஒரு முறை தம் சீடர்களாகிய கருணாகரரும் நிஷ்டாபரரும் வாதிட்டதைக் கேட்டு, ! உங்கள் பேச்சின் தன்மையறிவேன்: ஒயாப் பேச்சினை ஒழியுங்கள்" என்று உரை பகன் றார். இதனால் சமய வாதமாம் சழக்கினைக் கடந்த இவர் தம் சமரச நிலை தெள்ளிதற் புலனாம். இறுதியில் போரில் தோற்ற ஜீவகன் முனிவரை நாடு கிறான். மன்னனின் மனத் துயரைப் போக்கத் தான் சுருங்கை கண்டதைக் கூறி, அஞ்சற்க" என அபயம் அளித்து மனோன்மணியைக் காப்பாற்றும் பொறுப்பைத் தாம் ஏற்றுக்கொண்ட நிலையில், ஜீவகன் அவர் தன் பொருட்டு எடுத்த வருத்தத்தினை எண்ணி, -உன்திரு -* வுளப்படி கொடுபோய் அளித்தரு ளுதியேல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/304&oldid=856522" இலிருந்து மீள்விக்கப்பட்டது