பக்கம்:மனோன்மணீயம்.pdf/303

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர முனிவர் 391 _தித்த மனோன்மணி தன்னையும் சங்கரன் காக்க" என அவர் குறிப்பிடுவது, குடிலனின் சூழ்ச்சியினை ஜீவகனுக்கு. மறைமுகமாகச் சுட்டுவதேயாகும். நின் புதல்வியை யான் -ாண நேசித்தேன்; அத்திருவுறையும் அப்புறம் போதற்கு முத்ததாமோ இக்காலம்? உணர்த்தாய்' என்று சந்தரர் rவகனை வினவும் கூற்றில்தான் எத்துணைப் பொருட் செறிவு, தன்னடக்கம், பரிவுணர்ச்சி முதலியன நிறைந்து காணப்படுகின்றன. குடிலன் செய்யும் படிறுகள் முனிவர் அறியா தவரோ? என்று நகரவாசி ஒருவன் குறிப்பிடுகின்றான். ஆம்! குடிலன் செய்யும் சூழ்ச்சிகளை முற்ற உணர்ந்தவரே முனிவர். _யினும் குடிவனை நேரடியாக அவர் எதிர்த்துக் கொள்ள வில்லை. குடிலனோடு எங்கும் நேர் நின்று பேசாமல் ஒதுங்கி முருபுறம் போகின்றார். தியாரைக் காண்பதுவும் தீதே! தியோர் சொற் கேட்பதுவும் தீதே! தியோரோடு இணங்கி இருப்பதுவும் தீதே" என்றபடி சுந்தரர் நடந்துகொள்கிறார். இவருடைய தோற்றமே பிறரை நன்கு கவர்கின்றது. சிந்துரம்போல் சிவந்த அடிகள்; தாமரை மலர்போல் மலர்ந்த மதிமுகம்; கருணையொழுகு கண்கள்; பரிவினைப் புலப்படுத்தும் முறுவல்; பால்போல் வெளுத்த நரைத்த கலை; குற்றம் காண முடியாத பேச்சு: சாந்தமும் தயையும் தாங்கிய உடல்-இவையே சுந்தர முனிவரின் தவத்திருது கோலம். மனோன்மணி சுரமுற்றாள் என்று கேட்ட சுந்தரர் அந்தப்புரம் விரைகிறார். மன்னன் அவர்தம் மலரடி வணங்குகின்றான். முனிவர் நிகழ்ந்தது கேட்டு, மனோன் மணியின் சுரத்திற்குக் காரணம் காதலே என முடிவிற்கு வருகிறார். ஜீவகனை நோக்கி, குழவிப் பருவம் கழுவுங் காலை களிமிகு கன்னிய ருளமும் வாக்கும் புளியம் பழமுந் தோடும் போலாம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/303&oldid=856520" இலிருந்து மீள்விக்கப்பட்டது