பக்கம்:மனோன்மணீயம்.pdf/302

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

300 மனோன்மணியம் களிறுகள் பிளிறும் ஒசையினையும் குதிரைகளின் குளம்படி போசையினையும், முரசின் முழக்கினையும் அவித்து. மேலோங்கி எழுகின்றது. - முனிவர் என்றி.டிற் கனிவுறுங் கல்லும் எத்தனை பத்தி! எத்தனை கூட்டம்! என்று சேவகர்கள் பேசிக்கொள்கிறார்கள். சுந்தர முனிவரை ஜீவக மன்னனும் இன்புற வரவேற்கின்றான். பிறவிப் பிணி தீர்க்கும் பெருமான் என்று கூறி, அவர் வருகையினைக் கண்ணபெருமான் வருகையோ எனக் களிப்புறுகின்றான். எல்லோரையும். வாழ்த்திய சுந்தர முனிவர் மனோன்மணியின் நலத்தினைத் தனிப்பட உசாவு கின்றார். இதிலிருந்து சுந்தரமுனிவர் மனோன்மணிபாற் கொண்ட பேரன்பு புலப்படுகின்றது. உன்னருள் உடை யோற் கென்குறை" என்று மன்னன் தன் குலகுருவின் பேரருட் பெருக்கத்தினையே பெரிதென மதிக்கின்றான். * எத்தனை புரிதான் இருக்கினும் எமக்கெல்லாம் அத்த! நின் அருள்போல் அரனெது?" எனச் சுந்தரரின் அருள் ஒளியே தன்னை வழி நடத்திச் செல்லும் ஒளிப்பிழம்பு என ஜீவகன் மொழிகின்றான். கொடுமனக் குடிலன் கூட, ஊன்வரு பெருநோய் தான்விட அடைந்த அன்பரின் புறஇவ் வருளுருத் தாங்கி வங்தருள் கிருபா சுக்தரமூர்த்தி யேறி யாததொன் றில்லை என்று சுந்தரரைச் சிறப்பிப்பானேயானால், அவர் பெருமை. யினை விரித்துரைக்கவும் ஒல்லுமோ! கோட்டையின் சிறப்பெல்லாம் குறைவறக் குடிலன் வாய்க் கேட்ட முனிவர், 'கோட்டையல்லாது மன்னனைக் காக்கும் வழி உளதோ?’ என அமைதியாக எடுத்து மொழி' கிறார். காலம் என்பது கறங்குபோற் சுழன்று மேலது கீழாகவும் கீழது மேலாகவும் மாற்றிடும் தோற்றம் என்று, காலக்கடலில் மக்கள் அனைவரும் கட்டு மரங்களே என்ற கருத்தை வெளியிடுகின்றார். 'உன்னையும் உன் குலத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/302&oldid=856510" இலிருந்து மீள்விக்கப்பட்டது