பக்கம்:மனோன்மணீயம்.pdf/301

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. சுந்தர முனிவர் முதுநகராகிய மதுரை துறந்து கெடுமதியாளனாகிய குடிலன் கைப்பட்டு நிற்கும் நிலைமையால் ஜீவகனுக்கு யாது விளையுமோ என இரக்கமுற்று, அவனுடைய குலகுருவாகிய சுந்தர முனிவர் அவனுக்குத் தோன்றாத் துணையாயிருந்து ஆதரிக்க எண்ணித் திருநெல்வேலிக் கருகிலுள்ள ஓர் ஆசிரமம் வந்தமர்ந்தருளினார். -பேராசிரியர் சுந்தரம் பிள்ளை காவியுடை உடுத்துக் கந்தமூலங்கள் புசித்துக் காட்டிலே கண்மூடி வாழும் துறவியல்லர் சுந்தரர்: நாட்டிலே மக்கள் இடையிலே வாழ்ந்து மக்கள் நலம் பேணலே தவமாய தவம் என்று துணிந்து தொண்டில் நெஞ்சம் திளைக்கும் துரய துறவி இவர். ஜீவக வேந்தனைத் தொலைத்திடக் குடிலன் எடுக்கும் முயற்சிகள் எல்லாம் இவரால் மாற்றப்படுகின்றன. ஜீவ கனைக் காப்பாற்றும் பெரும் பொறுப்பினை இவர் ஏற்கின்றார். ஆயினும் தம் எதிர்ப்புக் குரலை எங்கும் எழுப்புவதில்லை, தீமையை எதிர்த்து நில்லாதே" (Resist not the evil) என்ற ஏசுவின் போதகம் இவர் வாழ்வின் விளக்கமாய் உளது. தீய சக்தி யினை எதிர்க்காமல், அத்தீய சக்திகள் தாமே மாயும் வகை யில் நற்செயல்களைச் செவ்வியறிந்து செயலாற்றுவதில் வல்லவராயிருக்கிறார். தென்னவன் குலம் தழைக்கத் திருவருள் கூட்டும் குரு முனிவராய்த் துலங்கித் தவத்தின் நலமெலாம் தன்மையில் விளங்கப் பாடுபடுகின்றார். நாடகத்தின் தொடக்கமே இவருடைய புகழைப் பலரும் பேசுவது போன்று அமைந்துள்ளது. சேவகர்கள் இங்கும் அங்கும் ஒடி முனிவர் அமரப் பொற்சிங்காதனமும், அவர் அடியிணை அருச்சனைக்காகும் மலர்களையும் நாடு கின்றனர். எங்கும் சுந்தர முனிவா! வந்தனம் வந்தனம்" என்னும் ஒலியே சிறந்தெழுகின்றது. இவ் ஆரவாரம்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/301&oldid=856508" இலிருந்து மீள்விக்கப்பட்டது