பக்கம்:மனோன்மணீயம்.pdf/300

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

298 மனோன்மணியம் என்று வேலால் நெஞ்சில் இடியுண்ட நிலையில் பழித்துப் பேசுகின்றான். ஜீவகனை போரில் வேல் கொண்டு குத்திடக் குடிலன் செய்த சூழ்ச்சி முடிவில் அவன் மகன் பலதேவ னையே பாதிக்கிறது. +. சேரனிடத்தில் இராச்சிய பாரத்தை இரந்து நின்ற போது அவன் பெற்ற பரிசில் "மூடுநின் பாழ்வாய்: சேரன் விஜயமும் திருடான்' என்பதேயாகும். "படபடத் திடுநின் பாழ்வாய் திறவாய்' என்று கைவிலங்குடன் புருடோத்தம னிைன் கைதியாக வரும் குடிலனை நோக்கி நாராயணன் படபடக்கின்றான். குடிலன் சூழ்ச்சியெல்லா ம் சிதை கின்றது. பலதேவனுக்கு மனோன்மணியை மணமுடிக்க இறுதி நேரத்தில் அவன் மேற்கொண்ட முயற்சியும் நிறை வேறவில்லை. மனோன்மணி புருடோத்தமனுக்கு மாலை யிடுகின்றாள். == இவ்வாறு குடில மனத்தில் தோன்றிய சூழ்ச்சிகன் எல்லாம் இறுதியில் அவனையே அடியோடு தகர்த்தெறி கின்றன. 'அறம் வெல்லும்; பாவம் தோற்கும்’ என்ற உண்மை குடிலன் வாழ்வால் விளக்கமுறுகின்றது. தருமத் தின் வாழ்வதனைச் சூது கவ் வினாலும் இறுதியில் தருமமே வெல்லும் என்பது குடிலனின் வாழ்வுவழி மனோன்மணியம் நமக்குணர்த்தும் நல்ல பாடமாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/300&oldid=856506" இலிருந்து மீள்விக்கப்பட்டது