பக்கம்:மனோன்மணீயம்.pdf/310

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

一致08 மனோன்மணியம் ஏவிய வழியான் போவதே யல்லால் ஆவதென். என்னால்: ஆ! ஆ! கன்றே என்று அடக்கமாக மறுமொழி கூறும் பொழுது, அறிவு, ஆற்றல், பண்பு, அடக்கம் ஆகிய அருங்குணங்களின் இருப்பிடமாக நடராசன் காட்சி தருகிறான். இத்தகைய பேராற்றலை நடராசனுக்கு வழங்கிய சக்தி எது? காதற் பெண்ணின் கடைக்கண் அன்பே தன்னை இயக்கி, எடுத்த செயல் இனிதாக நிறைவேற வெற்றிப் பாதை வகுத்திருக்கும் என முடிவு கொள்கிறான் நடராசன். பின்னிய கூந்தற் பேதையின் இளமுகம் என்னுளத் திருந்திங் கியற்றுவ திப்பணி அதனா லன்றோ இதுபோல் விரைவில் இவ்வினை இவ்வயின் இனிதின் முடிந்தது. இயற்கையும் காதலும் மட்டுமல்ல நடராசன் தெரிந் தவை: அரசியல் ரகசியம் அம்பலம் ஆகும் வகையும் அவன் அறிவான். இதனைப் பின்வரும் அவன் கூற்றால் அறிய swnrıbr அரசன் அமைச்சர் ஆதியர் தங்கள் சிங்தையில் புதைத்த அக்தரங் கப்பொருள் விழி முகம் க ைகமொழி தொழில் கடை இவைவழி ஒழுகிடும்; அவைகளை உழைபுளார் தமக்குத் தோற்றிய பலவொடும் தொடுத்துக் காற்றில் துாற்றுவர் காதற்களத்தில் தேறும் நடராசன் போர்க்களத்திலும் வீரமாகப் போரிடுகிறான். புல், புழு, வாய்க்கால், கல் முதலிய பொருள்களை உணர்ந்த நடராசன் அரசன். அமைச்சர், ஆழமில் கருத்தில் தோற்றுவது அனைத்தும் சாற்றும், ஏழைகள் ஆகிய அனைவரையும் அறிந்துள்ளான். இவற்றால் காதற் கன்னி வாணிக்கு ஏற்ற காதலன் தடராசனே என்பது நன்கு போதரும். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/310&oldid=856533" இலிருந்து மீள்விக்கப்பட்டது