பக்கம்:மனோன்மணீயம்.pdf/311

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. நாராயணன் இவன் குடிலனுடைய சூதுக ள் தெரிந்தவன். அரசன் நிந்தித்துத் தள்ளினும் அவனைக் காப்பாற்றும் பொருட்டு அவனை விட்டு நீங்காது மதுரையினின்றும் அவனோடு தொடர்ந்து வந்த சுந்தரம்பிள்ளை ாேடகத்தில் அருளின் திருவுருவாய்ச் சுந்தரர் வருகிறார் என்றால், அறிவின் பிழம்பாய் நாராயணன் வருகிறான். இவன் குலகுரு சுந்தர முனிவரின் திருக்கூட்டத்து அடியான். பொய்யினைக் கடிந்து .ெ ம ய் யி ைன ப் ப ற் றி வாழும் நாராயணன், சகடன் குடிலன் முதலானோர் கொண்ட பேராசைப் பெருக்கினை எள்ளி நகையாடி இரட்டுற மொழி கின்றான். கண்ணினைக் காக்கும் இமைபோல் ஜீவக வழுதி கயைக் காக்கிறான். போர்க்களத்திடையும், பின்னர் தற்கொலை செய்துகொள்ள முயன்ற போதும், ஜீவக வேந்தன் உயிரைக் காப்பாற்றுகின்றான். ஆற்றல் சான்ற இப்படை மறவன் படைவீரர்களிடம் செல்வாக்குடன் துலங்குகின்றான். தன் உயிரினும் அரசனது ஆணையே போற்றத்தக்கது என்னும் துணிபுடையவன் இவன்; மனித உள்ளத்தில் ஒடும் எண்ணங்களை உள்ளவாறே ஊடுருவிக் காணும் உயர் பேராளனாம் இவன், சிந்தித்துச் செயல் புரியும் வினையாண்மையும், நகைச்சுவை நாட்டமும் நன்கு கைவரப் பெற்றவன். குடிலன், குலகுருவாம் சுந்தரர் மீது மன்னன் மனத்தில் வெறுப்பு விளையும்படிவேண்டியன இயற்றுகின்றான். பழங் காலப் புராணத்தை விரித்து, வசிட்டர், கெளசிகர் முதலிய முனிவர்களின் செயல்களைக் குறிப்பிட்டு, முனிவர் மனிதரி லும் எவ்வகையினும் மேம்பட்டவர் அல்லர் என்றும், இச்சை யற்றவர்கள் இகத்தில் யாவரே என்றும், மன்னன் மனங் கொள்ளுமாறு பேசுகின்றான். இந்நிலையில் நாராயணன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/311&oldid=856535" இலிருந்து மீள்விக்கப்பட்டது