பக்கம்:மனோன்மணீயம்.pdf/312

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

310 மனோன்மணியம் குறுக்கிடுகின்றான். ஐயோ! பாவி அருந்தவ முனிவரைப் பொய்யனாக்கு கின்றானே இக்குடிலன்" என்று எண்ணி, * எடுப்பார் கைப்பிள்ளை யாய்த் தடுப்பாரின்றி வாழும் ஜீவகனின் புன்மை நோக்கிப் புலம்புகின்றான். து த து து பொல்லா வெறுமெலும்பை நாய்கெளவும் வேளை கீ செல்ல உறுமுவதென் நீயே யுரை எனறு அரசனை நோக்கிக் கூறும் அவன், பதவியை எலும் புத் துண்டமாகவும், குடிலனை நாயாகவும் உவமித்து, ஜீவகன் உண்மை நிலையினை உணருமாறு செய்கின்றான். தன் மூக்கில் கரியைத் தேய்த்துக்கொண்டு அரசன் முன் தோன்றிப் பிறர் நகையாட இவன் இடமாகி, ஏ! ஏ! நாரணா களியாய் உன்மூக்கு இருந்தவா றென்னை? ஏ! ஏ! இதுவென்? என்று அரசன் கேட்டபோது, மூக்கிற் கரிய ருளரென காயனார் துரக்கிய குறளின் சொற்படி யெல்லாம் உள்ளங்ண் னருகவர் இல்லார் ஆவரோ? என்று நகைச்சுவையாகவும், அதே நேரத்தில் பொருளாழத் தோடும் பதிலளிக்கின்றான். மேலும் நாராயணன் திருக் குறளை முற்றக் கற்ற நல்லான் என்பதும், சமயமறிந்து திருக்குறளை கையாளும் மதித்திறம் படைத்தவன் என்பதும் இக்கூற்று வழிப் புலனாகின்றன. "வெளி வேடத்தில் செந்நிறம் வாய்ந்த குன்றி மணி யைப்போல் செம்மையுடையோராய்ச் சிலர் இவ்வுலகில் காட்சியளித்தாலும், ஆழ்ந்து நோக்கில் அவர் உள்ளம் குன்றிமணியின் மூக்கில் உள்ள கருமை போன்று கொடிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/312&oldid=856537" இலிருந்து மீள்விக்கப்பட்டது