பக்கம்:மனோன்மணீயம்.pdf/316

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

314 மனோன்மணியம்

  • தம்மையும் பலிகொடுக்க முந்தும் விரைவோடு, பொய் பொறாத மனம் பதைக்க, குறைவெலாங் கண்டு குலுங்கக் குலுங்க நகைத்து வெறுத்து, ஒன்றுக்குமஞ்சாத பேராண்மை யோடு அரசரையும் காத்து, அனைவரிடமும் ஒடிப் பாயும் அன்பையும் வளர்த்து, உடன் சூழ்ந்தார் எல்லாரும் தங்கள் உயிரையும் தமக்கெனக் கொடுக்கும்படி அவர்களிடத்தேயும் தன்னல்மின்மையை ஒங்கச்செய்து, திருவிளையாடல் புரியும் இவர், இவை அனைத்தையும் பணயம் வைத்து, உலக அமைதிக்கெனக் கடமை ஒன்றையே தம்பி, நாடு கொடுத்த நஞ்சினை நச்சி உண்டு நமனுலகடைந்த நல்லார் சாக்ரடிசி னைப் போல இவரும் கடமைச் சொக்கட்டானாடுகின்றார். அன்பெல்லாம் கடமையின் விளக்கமாகக் காண்பதே இவரி கண்ட அன்பின் தனிப் பெருங் காட்சி” என்று அறிஞர் தெ. பொ. மீனாட்சிசுந்தரனார் நாராயணனின் பண்பு நவம்பற்றி நயமுறக் கூறுவர்.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/316&oldid=856545" இலிருந்து மீள்விக்கப்பட்டது