பக்கம்:மனோன்மணீயம்.pdf/317

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. புருடோத்தமன் நன்னயங் கருதாச் சதுரனாகிய புருடோத்தமன். -பேராசிரியர் சுந்தரம் பிள்ளை. தருமநாடெனப் பெயர் தாங்கிய திருவாழ் கோடாம் சேரதேசத்துப் பெருவேந்தன் புருடோத்தமன். தன்னை ஒப்பாரில்லாத தகைமை சான்றவன்; மனோன்மணி என்னும் பூங்கொடி படரப் பாங்காம் தருவாகப் புருடோத் தமன் முக்காலமும் உணர்ந்த சுந்திர முனிவரால் குறிக்கப் பெறுகிறான். நாடகத் தலைவி மனோன்மணிக்கு ஏற்ற தலைவன் இவனே. இருபது களங்கள் கொண்ட மனோன் மணிய நாடகத்தில் புருடோத்தமன் தோன்றுவது மூன்று களங்களிலேயாகும். பலதேவன் துரதுபோன களம் ஒன்று: சுருங்கை வழியே ஏகிய குடிலன் எதிர்பாராமல் புருடோத்த மனைச் சந்தித்துப் பாண்டிய நாட்டினைக் காட்டிக் கொடுப் பதாகக் கூறும் களம் இரண்டு; மனோன்மணி மாலையிட்டு மயங்கி அவன் தோளில் சாயும் இறுதிக் களம் மூன்று. ஆக மூன்று களங்களில் மட்டும் புருடோத்தமன் தோன்றினா லும் அவனது அழகு வடிவும், காதல் துன்பமும், வீர விம்மித மும், அறநெறி பிறழாச் சிந்தையும் நாடகத்தில் நன்கு விளக்கமுறுகின்றன. சுந்தரமுனிவர் புருடோத்தமனெனும் பொறையனையே தனக்கு மருமகனாக மதித்தார் என்று ஜீவகன் குடிலனிடம் கூறிய அளவில், குடிலன் புருடோத்தமனின் புறவழகினைப் புகழ்ந்துரைக்கின்றான். s புருடோத் தமனெனும் பொருாைகத் துறைவன் காண்டகும் ஆண்டகை யென்றும் ஞானம் மாண்ட சிந்தைய னென்றும் யாண்டுங் திரியும் தவசிகள் உரைசெய யானுங் கேட்டதுண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/317&oldid=856547" இலிருந்து மீள்விக்கப்பட்டது