பக்கம்:மனோன்மணீயம்.pdf/318

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

316 LDG3 asrrr GöT LD 6-Jör tL/ LD என்று குடிலன் கூறும் கூற்றால், புருடோத்தமன் கண்டார் மயங்கும் கட்டழகுக் காளை என்பதும், கற்றார் போற்றும் அறிஞன் என்பதும், தவசிகள் பாராட்டும் தகைமையோன் என்பதும் விளங்குகின்றன. மேலும், இருளெலாம் ஒளிவிட இலங்கிய உருவம் மருள்தரு மதன வடிவினன் என்று புருடோத்தமனைப் புகழ்ந்துரைக்கிறான் குடிலன். புருடோத்தமனை நாம் முதன் முதலில் இரண்டாம் அங்கத்தின் மூன்றாம் களத்தில் சந்திக்கிறோம். அப்பொழுது: அவன் கன விற் கண்ட காரிகையை எண்ணி, யார்கொலோ அறியேம்! யார் கொலோ அறியேம்!" என்று சிந்தித்து அயர் கிறான். விண்ணனங்கனைய கன்னியர் பலரைக் கண்டும் இதுவரை ஒருபோதும் கலங்கி யறியாத அவன் சித்தம் இப்போது மத்துறு தயிரில் திரிந்து பித்துக் கொண்டுள்ளது. ஆயினும் கனவிற் கண்ட அந்த கார்குழலாள் நவ்வியும். நண்பும் நலனும் உடையவள்" எனத் துணிகின்றான். அமுதமுற் றிருக்குங் குமுதவா யலர்ந்து மந்த காசங் தந்தவள் கின்ற நிலைமையென் நெஞ்சம் நீங்குவ தன்றே! என்று எண்ணும் புருடோத்தமன் கனவிற். கண்ட காரிகை, உண்டெனிற் கண்டிடல் வேண்டும் இலையெனில் இன்றே மறத்தல் கன்றே என்கின்றான். அவ்வாறே மறத்தலே முறையெனக் கருதி னும் மங்கையை மறக்க முடியவில்லை அவனால். எனவே எவகுடனாவது போர் இயற்றியாவது போரின் ஆரவாரத். தில் துயர் மறப்போம் என்ற முடிவிற்கு வருகிறான்;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/318&oldid=856549" இலிருந்து மீள்விக்கப்பட்டது