பக்கம்:மனோன்மணீயம்.pdf/320

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.18 மனோன்மணியம் என்று குறிப்பிடுகின்றான்; இக்கூற்றுக்களால் புருடோத்தி னிென் அஞ்சாமையும் அவன் வீரத்தில் அவன் கொண்ட நம்பிக்கையும் புலப்படுகின்றன. பலதேவன் போனவுடன், முட்டாள் இவனை விட்டவன் குட்டுப் பட்டபோ தன் றிப் பாரான் உண்மை என்று தனக்குள் இவ்ன் கூறிக்கொள்வது போன்றே ஜீவகன் வாழ்வில் அவலம் பற்றுகின்றது. ஆனால் புருடோத்தமனின் இம் முடிவினை, உண்னவா என்றியாம் உறவுபா ராட்டிற் குத்தவா எனும் உன் மத்தன் என்று குடிலன் குறிப்பிடுகின்றான். மேலும் தந்தை தாய்க் கீழ் வளர்ந்தவன் அல்லன் ஆதலின் நன்று தீது ஒன்றும் நாடா உளத்தன் என்றும் குறிப்பிடுகின்றான். துாண்டிடு சினத்தன்' என்றும், தொழுதிடில் மீள்வன்' என்றும் அவன் பண்பினை ட பழித்தும் குடிலன் பேசுகின்றான். ஜீவகனும் இதனை பொட்டியே. மலரிடிற் காய்வன், பர லிடில் மகிழ்வன்; பெரியோர் சிறியோர் பேதையர் அறிஞர் உரியோர் அயலார் என்றவன் ஒன்றும் உன்னான் என்று புருடோத்தமனைப் பற்றிக் குடிலனிடம் கூறு: கின்றான். ஆனால் இக் குற்றச்சாட்டுகளை உண்மையில் ஆய்ந்து காணின், அவை புருடோத்தமனுக்குப் பொருந்தாமற். போவதைக் காணலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/320&oldid=856555" இலிருந்து மீள்விக்கப்பட்டது