பக்கம்:மனோன்மணீயம்.pdf/357

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்துவக் கருத்துக்கள் 355 நோவும் சாவும் ஒன்றே அன்றியும் உலகெலாம் நோக்கில் நம் உடலொரு பொருளோ? (26-27) ருணாகரர் : உளமெனப் படுவதோ அளவிலாப் பெருவெளி; கோட்டையும் இல்லை பூட்டு தாழ் அதற்கிலை; நஞ்சே அனைய பஞ்சேந் திரியம்; அஞ்சோ வாயில்? ஆயிரம்; ஆயிரம். (132-135) II. o 暫 எங்கிலை அவனருள்? எல்லையில் அண்டம் தங்குவ தனைத்தும் அவனருட் சார்பில் அண்ட கோடிகளிங் கொன்றோ டொன்று விண்டிடா வண்ணம் வீக்கிய பாசம், அறியில் அருளலாற் பிரிதெதுஆ கருஷணம்? ஒன்றோ டொன்றியாப் புற்றுயர் அன்பில் நின்ற இவ் வுலகம், நிகழ்த்திய கருணை பயிற்றிடு பள்ளியே அன்றிப் பயனறக் குயிற்றிய பொல்லாக் கொடியயற் திரமோ? (152-160) 皋 # HH இத்தனி உலகில் எத்துயர் காணினும் அத்தனை துயரும் நம் அழுக்கெல்லாம் எரித்துச் சுற்றநற் சுவர்ணம் சோதித் தெடுக்க வைத்த அக் கினியென மதித்தலே உயிர்கட்கு உத்தம பக்தியென் றுள்ளுவர் ஒருகால் காரண காரியம் காண்குவம் அல்லேம் . (!71-177) o o # ஆ இவ்விதம் நோக்கிடில் எவ்விதத் தோற்றமும் செவ்விதிற் பற்பல காரணச் செறிவால் அவ்வவற் றுள் நிறை அன்பே ஆக்கும். (189-191)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/357&oldid=856726" இலிருந்து மீள்விக்கப்பட்டது