பக்கம்:மனோன்மணீயம்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 மனோன்மணியம் வா : விளை யாடுவோம் வாராய், - யார் முறை யாடுதல்? வார்சூழற் றிருவே! (6) மைனோன் : ஏனிது! ஏனிது வாணி! எட்பூ ஏசிய நாசியாய்! இயம்புக . 30. மனத்திடை யடக்கலை! வழங்குதி வகுத்தே. (7) வாணி : எப்படி யுனக்கியான் செப்புவே னம்மா? தலைவி தி தடுக்கற் பாற்றோ? தொலைய அனுபவித் தன்றோ அகலும்? மனையில் தந்தையுங்_கொடியன்; தாயுங் கொடியள்! 35. சிந்தியார் சிறிதும் யான்படும் இடும்பை. என்னுயிர்க் குயிராம் என்கா தலர்க்கும் இன்ன லிழைத்தனர் எண்ணிய வெண்ணம் முதலையின் பிடிபோல் முடிக்கத் துணிந்தனர் யாரொடு நோவேன்? யார்க்கெடுத் துரைப்பேன்? 40. வார்கடல் உலகில் வாழ்கிலன், மாளுவன் திண்ணம். மாளுவன் வறிதே. (8)

மனோன் :

முல்லையின் முகையும் முருக்கின்' இதழுங் காட்டுங் கைரவ வாயாய் ! உனக்கும் முரண்டேன்? பலதே வனுக்கே மாலை 45. சூடி டிற் கேடேன்? காதால் -- - வள்ளையி னழ கெலாங் கொள்ளைகொளணங்கே: வாணி : அம்மொழி வெம்மொழி. அம்மா! ஒழிதி. நஞ்சும் அஞ்சிலேன்: நின்சொல் அஞ்சினேன், இறக்கினும் இசையேன், தாமே துறக்கினும் 50. மறப்பனோ என்னுளம் மன்னிய ஒருவரை? ஆடவ ராகமற் றெவரையும் - நாடுமோ நானுள வளவுமென் உளமே (10) மைனோன் : வலம்புரிப் புறதெழு கலந்திகழ் மதியென வதியும் வதன மங்காய்! வாணி! - = நீெண்ட கூந்தல் 2. செம்முருங்கை 3. அம்பல் மல்ர் 4. கொடுஞ் சொல் 5. நிலைபெற்ற். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/40&oldid=856745" இலிருந்து மீள்விக்கப்பட்டது