பக்கம்:மனோன்மணீயம்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 மனோன்மணியம் குடில (அரசனை நோக்கி) நல்லதப் படியே நடக்கிலென்? இவர்க்கும் பொல்லா முரண்டேன்? - சகட : (குடிலனை நோக்கி) போம்! போம்! உமது குழந்தையேல், இங்ங்ணம் கூறிர்! முற்றும். இழந்திட வோவெனக் கித்தனை பாடு? 110. பூவையை வளர்த்துப் பூனைக் கீயவோ?. (அரசனை நோக்கி) காவலா! அவனைப் போலயான் கண்டிலன்; சுத்தமே பித்தன்; சொல்லுக் கடங்கான்; தனியே யுரைப்பன்: தனியே சிரிப்பன்; எங்கேனு மொருபூ இலைகளிை யகப்படில் 115. அங்கங் கதனையே நோக்கி நோக்கித் தங்கா மகிழ்ச்சியில் தலைதடு மாறுவன்; பரற்கலும் அவனுக் ககப்படாத் திரவியம் ஆயிரந் தடவை யாயினும் நோக்குவன்; பேயனுக் களிக்கவோ பெற்றனம் பெண்ணை? ஜீவ : 120. ஆமாம்! யாமுங் கண்டுளேஞ் சில கால் நின்றால் நின்றபடியே: அன்றி இருக்கினும் இருப்பன் எண்ணிலாக் காலம்; சிரிக்கினு விழிக்கினும் நலமிலை தியதே. அவனன் றோமுன் அஞ்சைக் களத்தில்... குடில : 125. அவன்றான்! அவன்றான்! அழகன்! ஆனந்தன். ஜீவ : * = அழகிருந் தென்பயன்? தொழிலெலாம் அழிவே; குடில : இங்குளன் என்றனர் சிதம்பரத் தனுப்பினேன்: சென்றில்ன் நின்றான்; இதந்' தரு நின்கட் டளையெப் படியோ? ஜீவ : 130. மெத்தவும் நன்மை; அப்படி யேசெய். 1. கூழாங்கல் 2. சுகம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/50&oldid=856770" இலிருந்து மீள்விக்கப்பட்டது