பக்கம்:மனோன்மணீயம்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதல் அங்கம்: மூன்றாம் களம் 51. பனம்பூச் சூடியும் முனம்போ லவேசுரம்: ஏது மறியாப் பேதை நேற்றுத் தவஞ்செய ஆசை யென்றவள் தனக்குக் காதனோய் காணவோ ரேதுவுமில்லை, 190. எந்தாய் இருக்கு நிலைமை இன் நீ வந்தே காண்குதி மன்னவ ரேறே! ΦΑΙ Ι - g ஆ1 ஆ! நோவிது காறுமொன் றறிகிலள். இதுவென் புதுமை? என்செய் கோயான்? ΦΟ : தவஞ்செய ஆசையென்று தாய் நவின்ற واقع 195. வாக்கு நோக்கின் முனிவர் மந்திரக் செய்கையோ என்றோர் ஐயம் ஜனிக்கும்; நேற்றங் கவட்கவர் சாற்றிய மாற்றம் அறியலாந் தகைத்தோ? рхіал і - வறிதவ் ஐயம் மொழியொரு சிறிதும் மொழிந்திலர்: கண்டுழி 200. அழுதனர்; அழுதாள் உடன்நன் மமுதும்; ஆசி பேசியங் ககலுங் காலை ஏதோ யந்திரம் எழுதி வைத் திடவோர் அறையுட னங்கண ந் திறவுகோ லோடு தமக்கென வேண்டினர்;அளித்தன முடனே 205. நமக்க தனா லென்? நாமறி யாததோ? என்னோ அறியேன் இந்நோய் விளைவு? (ஜீவகனும் செவிலியும் போக) குடில : (தனதுள்) - வந்திரத் தாபன மோவவ ரெண்ணினர்? அவ்வள வறிவி லாரே முனிவர்? அவ்வள வேதான்; அன்றியென்? ஆயினும்; 210. எத்தனை பித்தனிவ் வர்சன் 1 பேதையின் இத்திறங் காமம் என்பதிங் கறியான்; உரைக்குமுன் கருதுவம் தமக்குறு நலமே - - (குடிலன் போக, முதல் அங்கம்: மூன்றாம் களம் முற்றிற்று. 1. முற்றம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/53&oldid=856776" இலிருந்து மீள்விக்கப்பட்டது